Wednesday, November 21, 2007
 
படம்: உன்னுடன்
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்
பாடல்: வைரமுத்து
 
பல்லவி
=======
ஆ: கோபமா என் மேல் கோபமா
      பேசம்மா ஒரு மொழி பேசம்மா
      என் பாலைவனத்தில் உந்தன் பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா
      உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
      உள்ளுயிரே உருகுதம்மா
பெ: ஆ ஆ ஆ
ஆ: கோபமா என் மேல் கோபமா...
 
சரணம் 1
==========
ஆ: உன் பார்வை வடிக்கின்ற பாலொளியில் என் வானம் விடியுமடி
     உன் பாதம் படிகின்ற சிறுதுகளில் என் ஆவி துடிக்குதடி
     கோபமா என் மேல் கோபமா
     என் மார்பு கீறடி பெண்ணே அதில்
     உன் முகம் தோன்றிடும் கண்ணே (என் மார்பு கீறடி)
     கண்கள் சாமரம் வீசிடுமா இல்லை
     காயத்தில் கத்தி வீசிடுமா
 
     (கோபமா என் மேல் கோபமா..)
 
சரணம் 2
==========
பெ: ஆ ஆ ஆ
ஆ: நான் கண்களைத் தொலைத்துப் பிறந்திருந்தால் இந்தக் காதல் துயரமில்லை
      நீ இன்னொரு கிரகத்தில் பிறந்திருந்தால் இந்த ஏக்கம் சிறிதுமில்லை
      கோபமா என் மேல் கோபமா
      என் கண்ணில் ஏனடி வந்தாய் என்
      காற்றை நீ கொள்ளை கொண்டாய் (என் கண்ணில்)
      மெளனங்கள் மொழிகளின் வேஷமம்மா
      மறு மொழி ஒன்று பேசிடம்மா

      கோபமா ஒரு மொழி பேசம்மா

      என் பாலைவனத்தில் உந்தன் பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா
      உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
      உள்ளுயிரே உருகுதம்மா
     (கோபமா என் மேல் கோபமா...)
 

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/21/2007 05:57:00 AM | Permalink | 0 comments
Tuesday, August 14, 2007
படம்: உன்னாலே உன்னாலே
பாடியவர்கள்: ஹரிசரண், மதுஸ்ரீ
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: பா.விஜய்

பல்லவி
======

ஆ: வைகாசி நிலவே வைகாசி நிலவே
மைபூசி வைத்திருக்கும் கண்ணில் நீ
பொய்பூசி வைத்திருப்பதென்ன
பெ: வெட்கத்தை உடைத்தாய் கைக்குள்ளே அடைத்தாய்
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட நான்
தள்ளாடித் தத்தளிக்கும் நேரம்
ஆ: விழியில் இரண்டு விலங்கு இருக்கு
அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு
என் ஜீவன் வாழும்வரை ஓ..
என் செய்வாய் நாளும் எனை ( வைகாசி நிலவே)

சரணம்-1
=======

ஆ: தூவானம் எனத் தூறல்கள் விழத்
தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பிடுதே
பெ: கண்ணா நீ பொறு கட்டுக்குள் இரு
காதல் கைகூடட்டும்
அ: இதோ எனக்காக விரிந்தது இதழ் எடுக்கவா தேனே
பெ: கனி எதற்காகக் கனிந்தது அணில் கடித்திடத் தானே
அ: ஹோ.. காலம் நேரம் பார்த்துக் கொண்டா
காற்றும் பூவும் காதல் செய்யும்

ஆ: வைகாசி நிலவே..
பெ: ஹோ.. வெட்கத்தை உடைத்தாய்..

சரணம்-2
========

ஆ: நூலாடை என மேலாடை எனப்
பாலாடை மேனி மீது படரட்டுமா
பெ: நான் என்ன சொல்ல நீ என்னை மெல்லத்
தீண்டித் தீ வைக்கிறாய்
ஆ: அனல் கொதித்தாலும் அணைத்திடும் புனல் அருகினில் உண்டு
பெ: நனை நெருப்பாக இருக்கையில் எனைத் தவிப்பது கண்டு
ஆ: ஹோ.. மோகத்தீயும் தேகத் தீயும்
தீர்த்தம் பார்த்துத் தீராதம்மா

ஆ: வைகாசி நிலவே..
பெ: ஹோ.. வெட்கத்தை உடைத்தாய்..
ஆ: விழியில் இரண்டு விலங்கு இருக்கு
பெ: அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு
ஹோ. என் ஜீவன் வாழும் வரை
என் செய்வாய் நாளும் எனை (என் ஜீவன்).

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/14/2007 08:22:00 AM | Permalink | 2 comments
Tuesday, April 24, 2007

படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், ஹரிணி, கிருஷ்


பல்லவி
========
க்ரிஷ்: முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாகப் பரவசமாக வா வா வா அன்பே
ஓஹோ தனித்தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக வா வா அன்பே
கார்த்திக்: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே
ஒரு சொட்டுக் கடலும் நீ ஒரு பொட்டு வானம் நீ
ஒரு புள்ளிப் புயலும் நீ பிரம்மித்தேன்
ஓ ஒளிவீசும் இரவும் நீ உயிர்கேட்கும் அமுதம் நீ
இமைமூடும் விழியும் நீ யாசித்தேன்
க்ரிஷ்: முதல் முதலாக முதல் முதலாக...

சரணம்-1
========
கார்த்திக்: ஒரு பார்வையின் நீளத்தை ஒரு வார்த்தையின் ஆழத்தை
தாங்காமல் வீழ்ந்தேனே தூங்காமல் வாழ்ந்தேனே
நதி மீது சருகைப் போல் உன்பாதை வருகின்றேன்
கரைத்தேற்றி விடுவாயோ கதிமோட்சம் தருவாயோ
மொத்தமாய் மொத்தமாய் நான்மாறிப் போனேனே
சுத்தமாய் சுத்தமாய் தூள்தூளாய் ஆனேனே
க்ரிஷ்: முதல் முதலாக முதல் முத்லாக..
கார்த்திக்: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே

சரணம்-2
========
கார்த்திக்: நீயென்பது மழையாக நானென்பது வெயிலாக
மழையோடு வெயில் சேரும் அந்த வானிலை சுகமாகும்
ஹரிணி: சரியென்று தெரியாமல் தவறென்று புரியாமல்
எதில்வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான்
கார்த்திக்: என்வசம் என்வசம் இரண்டடுக்கு ஆகாயம்
இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்
பபபபப்பப்ப பபபபப்பப்ப ..


ஹரிணி: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே
கார்த்திக்: ஒரு சொட்டுக் கடலும் நீ ஒருபொட்டு வானம் நீ
ஒருபுள்ளிப் புயலும் நீ பிரம்மித்தேன்
ஹரிணி: ஒளிவீசும் இரவும் நீ உயிர்கேட்கும் அமுதம் நீ
இமைமூடும் விழியும் நீ யாசித்தேன்

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/24/2007 04:08:00 AM | Permalink | 0 comments