Tuesday, October 09, 2012

படம்: தாண்டவம்
பாடல்: நா.முத்துக்குமார்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: சைந்தவி, சத்ய பிரகாஷ், ஜி.வி.பிரகாஷ் குமார்

சரணம்
========
உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும் போதும்  உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

காதலாகிக் காற்றிலாடும்
ஊஞ்சலாய் நானாகிறேன்
காலம் தாண்டி வாழ வேண்டும்
வேறு என்ன கேட்கிறேன்

(உயிரின் உயிரே உனது விழியில்..)

பல்லவி 1
==========
சாயங்காலம் சாயும் நேரத்தில்
தோழி போல மாறுவேன்
சோர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில்
தாயைப் போலத் தாங்குவேன்

வேறு பூமி வேறு வானம் தேடியே நாம் போகலாம்
சேர்த்து வைத்த ஆசையாவும் சேர்ந்து நாமங்கு பேசலாம்
அகலாமலே அணுகாமலே இந்த நேசத்தை யார் நெய்தது
அறியாமலே புரியாமலே இரு நெஞ்சுக்குள் மழை தூவுது

(உயிரின் உயிரே உனது விழியில்..)


பல்லவி 2
==========
தண்டவாளம் தள்ளி இருந்தது
தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது
என்னுள் உன்னைத் தேடத்தான்

ஐந்து வயதுப் பிள்ளை போலே உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும் செல்ல முத்தம் பதிக்கவா
நிகழ்காலமும் எதிர்காலமும்  இந்த அன்பெனும் வரம் போதுமே
இறந்தாலுமே இறக்காமலே இந்த ஞாபகம் என்றும் வாழுமே

(உயிரின் உயிரே உனது விழியில்..)


 -- மு. இராகவன் என்ற சரவணன்
     29 செப்டம்பர் 2012 சனிக்கிழமை பிற்பகல் 3 45 மணி இந்திய நேரப்படி

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 10/09/2012 05:46:00 AM | Permalink |


3 Comments:


At Friday, September 06, 2013 1:43:00 AM, Anonymous Tamil song Lyrics

எனக்கு மிகவும் பிடித்த பாடல்.ஒவ்வொரு வரியும் மிகவும் அருமை.புதிய பாடல் வரிகளை பெற - பாடல் வரிகள்

 

At Friday, September 06, 2013 1:46:00 AM, Anonymous Tamil song Lyrics

எனக்கு பிடித்த பாடல்.இனிமையான வரிகள்.புதிய தமிழ் பாடல் வரிகளை பெற - பாடல் வரிகள்

 

At Thursday, November 14, 2013 5:55:00 AM, Blogger Raghavan alias Saravanan M

@பாடல் வரிகள்,

நன்றி உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

தாமதமான எனது பதிவுக்கு மன்னிக்கவும்.