Tuesday, August 14, 2007
படம்: உன்னாலே உன்னாலே
பாடியவர்கள்: ஹரிசரண், மதுஸ்ரீ
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: பா.விஜய்

பல்லவி
======

ஆ: வைகாசி நிலவே வைகாசி நிலவே
மைபூசி வைத்திருக்கும் கண்ணில் நீ
பொய்பூசி வைத்திருப்பதென்ன
பெ: வெட்கத்தை உடைத்தாய் கைக்குள்ளே அடைத்தாய்
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட நான்
தள்ளாடித் தத்தளிக்கும் நேரம்
ஆ: விழியில் இரண்டு விலங்கு இருக்கு
அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு
என் ஜீவன் வாழும்வரை ஓ..
என் செய்வாய் நாளும் எனை ( வைகாசி நிலவே)

சரணம்-1
=======

ஆ: தூவானம் எனத் தூறல்கள் விழத்
தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பிடுதே
பெ: கண்ணா நீ பொறு கட்டுக்குள் இரு
காதல் கைகூடட்டும்
அ: இதோ எனக்காக விரிந்தது இதழ் எடுக்கவா தேனே
பெ: கனி எதற்காகக் கனிந்தது அணில் கடித்திடத் தானே
அ: ஹோ.. காலம் நேரம் பார்த்துக் கொண்டா
காற்றும் பூவும் காதல் செய்யும்

ஆ: வைகாசி நிலவே..
பெ: ஹோ.. வெட்கத்தை உடைத்தாய்..

சரணம்-2
========

ஆ: நூலாடை என மேலாடை எனப்
பாலாடை மேனி மீது படரட்டுமா
பெ: நான் என்ன சொல்ல நீ என்னை மெல்லத்
தீண்டித் தீ வைக்கிறாய்
ஆ: அனல் கொதித்தாலும் அணைத்திடும் புனல் அருகினில் உண்டு
பெ: நனை நெருப்பாக இருக்கையில் எனைத் தவிப்பது கண்டு
ஆ: ஹோ.. மோகத்தீயும் தேகத் தீயும்
தீர்த்தம் பார்த்துத் தீராதம்மா

ஆ: வைகாசி நிலவே..
பெ: ஹோ.. வெட்கத்தை உடைத்தாய்..
ஆ: விழியில் இரண்டு விலங்கு இருக்கு
பெ: அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு
ஹோ. என் ஜீவன் வாழும் வரை
என் செய்வாய் நாளும் எனை (என் ஜீவன்).

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/14/2007 08:22:00 AM | Permalink |


2 Comments:


At Tuesday, August 14, 2007 11:53:00 PM, Blogger கதிர்

நல்ல முயற்சி.

இந்தியன் படத்திலிருந்து.
கப்பலேறிப்போயாச்சு என்ற பாடலை வெகுநாளாக தேடுகிறேன் கிடைக்கவில்லை.

நேரம் கிடைத்தால் போடுங்கள்.

flashkathir@gmail.com

 

At Wednesday, August 15, 2007 1:09:00 AM, Blogger Raghavan alias Saravanan M

@ தம்பி,

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி தம்பி. உங்கள் வரவு நல்வரவாயிற்று.

அடடா..என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? போட்டுட்டாப் போச்சு!!

நாளை காலை உங்கள் பார்வைக்கு இருக்கும் தம்பி!!