Monday, May 07, 2007

படம்:          தாமிரபரணி

பாடியவர்:  கே.கே (கே.கிருஷ்ணமூர்த்தி)

இசை:         ஹாரிஸ் ஜெயராஜ்

இயக்குநர்: ஹரி

 

 

பல்லவி

========

 

வார்த்தை ஒண்ணு வார்த்தை ஒண்ணு கொல்லப் பாக்குதே

அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டப் பாக்குதே (வார்த்தை ஒண்ணு)

நான் திமிரா செஞ்ச காரியம் ஒண்ணு தப்பாப் போனதே

என் தாமிரபரணித் தண்ணி இப்போ உப்பாப் போனதே

நீ எனக்கு சொந்தமில்லை என்று சொன்னவுடன் மனசு வெறுத்துப்போச்சே

என் நிழலில் கூட இப்ப ரத்தம் கொட்டுதடி இதயம் சுருங்கிப்போச்சே (வார்த்தை ஒண்ணு)

 

சரணம்-1

=========

 

உறவுகள் எனக்கது புரியல சில உணர்வுகள் எனக்கது விளங்கல

கலங்கரை விளக்கமே இருட்டுல

பெத்ததுக்கு தண்டனைய கொடுத்துட்டேன்

அவன் ரத்தத்துல துக்கத்தை நான் தெளிச்சுட்டேன்

அன்புல அரளிய வெதைச்சிட்டேன்

அட்டைக்கத்தி தான்னு நான் ஆடிப்பாத்தேன் விளையாட்டு

வெட்டுக்கத்தியாக அது மாறி இப்ப வினையாச்சு

பட்டாம்பூச்சி மேல ஒரு கொட்டாங்குச்சி மூடியதே

கண்ணாமூச்சி ஆட்டத்துல கண்ணே இப்ப காணலியே

வார்த்தை ஒண்ணு.. வார்த்தை ஒண்ணு...

 

சரணம்-2

=========

 

படைச்சவன் போட்ட முடிச்சிது என் கழுத்துல மாட்டி இறுக்குது

பகையிலே மனசு தான் பதறுது

கனவுல பெய்யிற மழையிது நான் கைதொடும் போது மறையுது

மேகமே சோகமா உறையுது

சூரத்தேங்கா(ய்) போல என்னை சுக்குநூறா உடைக்காதே

சொக்கப் பனைமேல நீ தீயை அள்ளி வீசாதே

எட்டி எட்டிப் போகையில ஈரக்குலை வேகிறதே

கூட்டாஞ்சோறு ஆக்கையில திரிக்காத்து வீசுதே

(வார்த்தை ஒண்ணு)
 
 

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/07/2007 02:21:00 AM | Permalink |


0 Comments: