பாடியவர்கள் : ஹரிசரண், ஸ்ருதி
இசை : தரண்
பல்லவி
======
பெ: உன்னைக் கண்டேனே முதல்முறை நான்
என்னைத் தொலைத்தேனே முற்றிலுமாய்த் தான்
(உன்னைக் கண்டேனே)
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹய்யய்யோ அச்சம் வருதே
தப்பிச் செல்லவே வழிகள் இல்லை இங்கே
ஹய்யோ ஹய்யய்யோ ச்சீ என்னவோ பண்ணினாய் நீயே
(உன்னைக் கண்டேனே முதல்முறை)
ஆ: எரிக்கிற மழையிது குளிர்கிற வெயிலிது
கொதிக்கிற நீரிது அணைக்கிற தீயிது
இனிக்கிற வலியிது இரும்புள்ள பூவிது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே
நிஜமுள்ள பொய்யிது நிறமுள்ள இருட்டிது
மெளனத்தின் மொழியிது மரணத்தின் வாழ்விது
அந்தரத்தின் கடலிது கட்டிவந்த கனவிது
அஹிம்சையில் கொல்வது கேள் பெண்ணே
பெ: ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன்பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே
சரணம் 1
========
பெ: காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்
கண்ணோடு இருக்கும் பல கடிதம்
ஆ: பெண்ணே நானும் உன் கண்ணைப் படித்தேன்
புரியாமல் தவித்தேன் பொய்
சொல்லுதோ மெய் சொல்லுதோ
ஹோ காதல் எனைத் தாக்கிடுதே
பெ: சரிதான் என்னையும் அது சாய்த்திடுதே
ஆ: இரவில் கனவும் எனை சாப்பிடுதே
பெ: பொதுவாய் வயதில் இதில் தப்பிக்க யாருமில்லையே
(உன்னைக் கண்டேனே முதல்முறை)
சரணம் 2
========
பெ: ஏனோ இரவில் ஒருபாடல் கேட்டால்
உடனே என் உள்ளே நீ வருவாய்
ஆ: கோவில் உள்ளே கண்மூடி நின்றால்
உன் உருவம் தானே எந்நாளுமே நெஞ்சில்தோன்றுமே
நான் உன்னால் தான் சுவாசிக்கிறேன்
பெ: நான் உன் பேர் தினம் வாசிக்கிறேன்
ஆ: உயிரை விடவும் உனை நேசிக்கிறேஹேன்
பெ: கடவுள் நிலையை நம் கண்ணிலே காட்டிடும் காதல்
(உன்னைக் கண்டேனே)
பெ: உன்னைக் கண்டேனே முதல்முறை நான்
என்னைத் தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
காதல் பூதமே
ஆ: என்னை நீயும் தொட்டாய்
பெ: ஹய்யோ ஹய்யய்யோ
ஆ: அச்சம் வருதே
பெ: தப்பிச் செல்லவே வழிகள் இல்லை இங்கே
ஆ: ஹய்யோ ஹய்யய்யோ
பெ: ச்சீ என்னவோ பண்ணினாய் நீயே
ஆ: எரிக்கிற மழையிது குளிர்கிற வெயிலிது
கொதிக்கிற நீரிது அணைக்கிற தீயிது
இனிக்கிற வலியிது இரும்புள்ள பூவிது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே
நிஜமுள்ள பொய்யிது நிறமுள்ள இருட்டிது
மெளனத்தின் மொழியிது மரணத்தின் வாழ்விது
அந்தரத்தின் கடலிது கட்டிவந்த கனவிது
அஹிம்சையில் கொல்வது கேள் பெண்ணே
பெ: ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன்பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே
பெ: மனசுக்குள் ஏதோ சொல் சொல்
எதிரினில் வந்து நில் நில்
உயிருக்குள் ஏதோ ஜல் ஜல்
இது சரிதானா நீ சொல் (மனசுக்குள்)
Labels: Movie-P, Song-U, சரண்யா பாக்யராஜ், பிருத்விராஜ், ஸ்ருதி, ஹரிசரண்
Hi
Sorry saw ur commetn very late..
Nice blog
But yenna romba naala aala kanumey? Saw ur other blogs as well
but ellamey thoonguthey...