Monday, August 07, 2006
படம் : நாளை
பாடியவர் : கார்த்திக்
இசை : கார்த்திக்ராஜா

பல்லவி
======
ஒருமாற்றம் உருமாற்றம்
இரு இதயத்தில் நடக்கிற தடுமாற்றம்
நடைமாற்றம் உடைமாற்றம்
இந்த நெருப்புக்குள் எப்படி நீரோட்டம்
நடந்து போகும் பாதையில் இரண்டுபக்கம் பூமரம்
மழையும் வெயிலும் கலந்தபின் வானவில்லாய் மாறிடும்
உலகமே புதிதாய்த் தோன்றும்

(ஒருமாற்றம் உருமாற்றம்)

சரணம் 1
========
நேற்றுவரை...
நேற்றுவரை வானத்தை நிமிர்ந்துபார்க்க நேரமில்லை
கண்கள்மூடிப் பார்த்தாலும் கனவுகள் கண்டதில்லை
முற்றுப்புள்ளி பக்கத்திலே முகவரி ஒன்று வருகிறதே
மூச்சுக்காற்று மொத்தத்திலே அர்த்தம் இன்று புரிகிறதே
புரிகிறதே ஓ ஓ ஓ ஓ

(ஒருமாற்றம் உருமாற்றம்)

சரணம் 2
========
பூமியிலே...
பூமியிலே யாருமிங்கு தனியாகப் பிறப்பதில்லை
வழித்துணைகள் வருகையிலே பயணங்கள் மறப்பதில்லை
கட்டாந்தரையில் இன்று ஒரு காலடிச்சுவடு தெரிகிறதே
வெட்டவெளியில் திரிந்தபின்னே வீட்டின் அருமை புரிகிறதே
புரிகிறதே ஓ ஓ ஓ ஓ

(ஒருமாற்றம் உருமாற்றம்)

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/07/2006 12:26:00 AM | Permalink |


2 Comments:


At Friday, November 17, 2006 12:43:00 PM, Blogger rahini

isaiku minsiya maruntheethu
isaiyil madiyil ulakai marakkalam

isaiku uyir kodukkum
piria

 

At Saturday, November 18, 2006 11:44:00 AM, Blogger Raghavan alias Saravanan M

நன்றி ராகினி.. வருகைக்கும் பின்னூட்டப் பதிவு தந்தமைக்கும்....

இசைக்கு உயிர் கொடுக்கும் ராகினி... எந்த வகையில் என்று தெரிந்து கொள்ளலாமா தோழி!?