பாடியவர்கள் : ஹரீஷ் ராகவேந்திரா, ஹரிணி
இசை : சிற்பி
பல்லவி
======
ஆ: ரகசியமானது காதல் மிகமிக
ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம்தனை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகமனுபவிக்கும்
சுவாரசியமானது காதல் மிகமிக
சுவாரசியமானது காதல்
சரணம் - 1
==========
ஆ சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதில்லை மனமானது
சொல்லும் சொல்லைத் தேடித்தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை வெளிச்சததைப் போல அது சுதந்திரமானதுமல்ல
ஈரத்தை இருட்டினைப் போல அது ஒளிந்திடும் வெளிவரும் மெல்ல
(ரகசியமானது காதல்)
சரணம் - 2
=========
பெ கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத் தானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினைப் போல விரல் தொடுவதில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளைப் போல அதை உயிரினில் உணரணும் மெல்ல
(ரகசியமானது காதல்)
Labels: Movie-K, Song-R, சிற்பி, ஹரிணி, ஹரீஷ் ராகவேந்திரா
nice work keep it up