Tuesday, January 15, 2008
 
படம்: காளை
பாடியவர்: மதுஸ்ரீ
இசை: ஜி.வி.பிரகாஷ்
 
 
பல்லவி
======
 
எப்ப நீ என்னைப் பாப்ப
எப்ப என் பேச்சைக் கேப்ப
எப்ப நான் பேச கெட்ட பையா
 
எப்போடா கோபம் கொறையும்
எப்படா பாசம் தெரியும்
எப்ப நான் பேச கெட்ட பையா
 
(எப்ப நீ என்னைப்)
 
நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன்
நிஜமாக உந்தன் முன்னால் தடுமாடுறேன்
 
ஒரு செல்லா நாயாய் உந்தன் முன்னே வாலாட்டுறேன்
உன் செயலை எல்லாம் தூரம் நின்று பாராட்டுறேன்
என்னை ஒரு முறை நீயும் திரும்பிப் பார்ப்பாயா
 
ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ
 
 
சரணம்-1
========
 
கண்ணைக் கட்டிக்கொண்டு உன் பின்னால்
காலம் முழுவதும் வருவேனே
உந்தன் பாதையில் பயமில்லை நீ வா
 
மலையை சுமக்கிற பலமுனக்கு
மலரை ரசிக்கிற மனமுனக்கு
இனிமேல் போதும் நீ எனக்கு நீ வா
 
உன் துணை தேடி நான் வந்தேன் துரத்தாதேடா
உன் கோபம் கூட நியாயமென்று ரசித்தேனடா
 
நீ தீயாயிரு எனைத் திரியாய்த் தொடு
நான் ஒளி பெற்றே வாழ்வேனடா
 
அட என்னைத் தவிர எல்லாப் பேரும் ஆணாய் ஆனாலும்
நான் உனக்கு மட்டும் சொந்தம் என்றேன் என்ன ஆனாலும்
நீ இல்லை என்று சொல்லி விடேண்டா
 
எரிமலை கண்கள் ரெண்டு  பனிமலை இதயம் ஒன்று
உன்னிடம் கண்டேன் கெட்ட பையா
பூமியில் ஆம்பளை என்று உன்னை தான் சொல்வேன் என்று
வேறென்ன சொல்ல கெட்ட பையா
 
உன்னாலே அச்சமின்றி நான் வாழவே
உன்கிட்ட அச்சப்பட்டு ஏன் சாகுறேன்
 
இந்தப் பூமிப்பந்தை தாண்டிப்போக முடியாதுடா
உன் அருகில் நின்றால் மரணம் கூட நெருங்காதடா
என் நிலவரம் உனக்குப் புரியவில்லையா
 
குழு: ஓ ஓ ஓ ஓ
 

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 1/15/2008 06:33:00 AM | Permalink | 0 comments
Saturday, December 29, 2007
 
படம்: கிச்சா வயசு 16
பாடல்: பா.விஜய்
இசை: தினா
பாடியவர்: உன்னிமேனன் 
 
பல்லவி
======
 
சில நேரம் சில பொழுது
சோதனை வரும் பொழுது
நம்பிக்கையால் மனம் உழுது
வானில் உன் பெயர் எழுது 

(சில நேரம் சில பொழுது)

லட்சியக் கதவுகளைத் திறந்து வைப்போம்
இதயத்தின் சோகங்களை இறக்கி வைப்போம்
சூரியன் என்பது கூட சிறு புள்ளி தான்
சாதிக்க முதல் தகுதி ஒரு தோல்வி தான்
 
(சில நேரம் சில பொழுது)
 
சரணம்-1
=======
வானம் தலையில் மோதாது
பூமி நகர்ந்து போகாது
நடுவில் இருக்கும் உந்தன் வாழ்க்கை
தொலைந்து ஒன்றும் போகாது 
 
சோகம் என்றும் முடியாது
கவலை என்றும் அழியாது
இரண்டையும் தான் ஏற்றுக் கொண்டால்
வாழ்க்கை என்றும் தோற்காது
 
நெஞ்சே பொன் நெஞ்சே தடையாவும் துரும்பு
தீயாய் நீயானால் மெழுகாகும் இரும்பு
தோல்வி அவை எல்லாம் சில காயத் தழும்பு
ஏறு முன்னேறு ஒளியோடு திரும்பு
 
பறவை அதற்கும் இறகு சுமையா
தோல்வி ஒரு தடையா
 
(சில நேரம் சில பொழுது)
 

சரணம்-2
=======

உனது கண்கள் அழும்போது
எந்த விரலும் துடைக்காது
பிறரை நம்பி நீயும் நின்றால்
வந்த பாரம் தீராது
 
இன்று வந்த ராஜாக்கள்
நேற்று என்ன செய்தார்கள்
தோல்வி வந்து தீண்டும் போது
தன்னை நம்பி வாழ்ந்தார்கள்
 
கோடு அதன் மேலும் புதுக்கோலம் பிறக்கும்
மேடு அதில் ஏறும் நீர் வேகம் எடுக்கும்
சோகம் அதை வென்றால் ஒரு சக்தி பிறக்கும்
பாதை சில போனால் பல பாதை பிறக்கும்
 
நேற்றை மறப்போம் நாளை ஜொலிப்போம்
இன்று ஜெயித்திருப்போம்

(சில நேரம் சில பொழுது)

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 12/29/2007 12:53:00 AM | Permalink | 0 comments
Wednesday, October 24, 2007

படம்: க‌ருப்ப‌சாமி குத்த‌கைதார‌ர்
பாடியவர்: பாம்பெ ஜெய‌ஸ்ரீ
இசை: தினா

பல்லவி
=======

பெ: உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து
    க‌ண்ணு ரெண்டும் க‌ண்ணீருக்கு வாக்க‌ப்ப‌ட்ட‌து
    ஒத்த‌ச் சொல்லு புத்திக்குள்ள‌ மாட்டிக்கிட்ட‌து
    த‌ப்பிச் சொல்ல‌க் கூடாதுன்னு கேட்டுக்கிட்ட‌து
    தேதித் தாளைப் போலே வீணே நாளும் கிழிய‌றேன்
    நான் தேர்வுத் தாளை க‌ண்ணீரால‌ ஏனோ எழுதுறேன்
    இது க‌ன‌வா ஆஆஆஆ... இல்லை நிஜ‌மா
    த‌ற்செய‌லா தாய் செய‌லா..
    நானும் இங்கு நானும் இல்லையே (உப்புக்க‌ல்லு) 
   

சரணம்‍‍‍‍‍ 1
=========

பெ: ஏதும் இல்லை வண்ண‌ம் என்று நானும் வாடினேன்
     நீ ஏழு வ‌ண்ண‌ வான‌வில்லாய் என்னை மாத்துன‌
    தாயும் இல்லை என்று உள்ள‌ம் நேற்று ஏங்கினேன்
    நீ தேடி வ‌ந்து நெய்த‌ அன்பால நின்று தாக்கினாய்
    க‌த்தி இன்றி ர‌த்த‌ம் இன்றிக் காய்ப்ப‌ட்ட‌வ‌ள்
    உன் க‌ண்க‌ள் செய்த‌ வைத்திய‌த்தால் ந‌ன்மைய‌டைகிறேன்
    மிச்சம் இன்றி மீதம் இன்றி சேத‌ப்ப‌ட்ட‌வ‌ள்
    உன் நிழ‌ல் கொடுத்த‌ தைரிய‌த்தால் உண்மைய‌றிகிறேன்

    உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து
    ஒத்த‌ச்சொல்லு புத்திக்குள்ள‌ மாட்டிக்கிட்ட‌து
    ஓ ஓ ஓ ஓஒ


சரணம் 2
=========

பெ: மீசை வைத்த‌ அன்னை போல‌ உன்னைக் காண்கிறேன்
     நீ பேசுகின்ற‌ வார்த்தை எல்லாம் வேத‌மாகுதே
     பாழ‌டைந்த‌ வீடு போல‌ அன்று தோன்றினேன்
     உன் பார்வை ப‌ட்ட‌ கார‌ண‌த்தால் கோல‌ம் மாறுதே
     க‌ட்டிலுண்டு மெத்தை உண்டு ஆன‌ போதிலும்
     உன் பாச‌ம் க‌ண்டு தூங்க‌வில்லை என‌து விழிகளே        
     தென்ற‌லுண்டு திங்க‌ளுண்டு ஆன‌ போதிலும்
     க‌ண் நாளும் இங்கு தீண்ட‌வில்லை உன‌து நினைவிலே
     (உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து)

 

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 10/24/2007 07:58:00 AM | Permalink | 0 comments
Wednesday, May 02, 2007
படம்: கடலோரக் கவிதைகள்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி
இசை: இளையராஜா
இயக்குநர்: பாரதிராஜா
 
 
பல்லவி
======
ஆ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
      எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
      பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவளமல்லித் தோட்டம்
      நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள் கூச்சம்
பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
      கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
 
 
சரணம்-1
=========
பெ: மனசு தடுமாறும் அது நெனச்சா நெறம்மாறும்
      மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடைபோடும்
ஆ: நித்தம் நித்தம் ஒன்நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
     மாடுரெண்டு பாதைரெண்டு வண்டிஎங்கே சேரும்
பெ: பொத்திவச்சா அன்பு இல்லை சொல்லிப்புட்டா வம்புஇல்லை
      சொல்லத்தானே தெம்புஇல்லை இந்தத்துன்பம் யாரால 
 
 
சரணம்-2
=========
ஆ: பறக்கும் திசைஏது இந்தப் பறவை அறியாது
      ஒறவும் தெரியாது அது ஒனக்கும் புரியாது
பெ: பாறையில பூமொளச்சுப் பாத்தவுக யாரு
      அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
ஆ: காலம் வரும் வேளையில காத்திருப்பேன் பொன்மயிலே
பெ: தேருவரும் உண்மையிலே சேதிசொல்வேன் கண்ணாலே
 
 
பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே..
       கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
       பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவளமல்லித் தோட்டம்
       நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்
ஆ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
       எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/02/2007 03:07:00 AM | Permalink | 0 comments
Friday, June 30, 2006
படம் : கண்ட நாள் முதல்
பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், சாதனாசர்கம்
இசை: யுவன்ஷங்கர்ராஜா

பல்லவி
======
ஆ: லை லை லை லை லாய் லாய் லாய்
லாஹி லாஹி லாஹிலே
மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
பெ: சுடும் வெயில் கோடைக்காலம்
கடும் பனி வாடைக்காலம்
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா?
இலையுதிர் காலம் தீர்ந்து
எழுந்திடும் மண்ணின் வாசம்
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே
ஆ: ஓ மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ?
பின்னலாய்ப் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திடத் தானோ?
லை லை லை லை லாய் லாய் லாய்
லாயே லாயே லாய் லாய் லாய்
(மேற்கே மேற்கே தான்)

சரணம் - 1
=========
ஆ: ஓ கோபம் கொள்ளும் நேரம் வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா
ஓ கோபம் தீரும் நேரம் மேகம் இல்லா வானம்
பெளர்ணமியாய்த் தோன்றும் அதே நிலா
பெ: இனி எதிரிகள் என்றே எவருமில்லை
பூக்களை விரும்பா வேர்களில்லை
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே
இது நீரின் தோளில் கைபோடும்
ஒரு சின்னத் தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவையில்லையே
ஆ: மேற்கே மேற்கே தான்...

சரணம் - 2
=========
ஆ: வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டால்
நீதான் என்று பார்த்தேனடி சகி
பெண்கள் கூட்டம் வந்தால் எங்கே நீயும் என்றே
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி
பெ: இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ
காற்றே சிறகாய் விரிந்திடுமோ
நிலவின் முதுகைத் தீண்டும் வேகமோ
அட தேவைகள் இல்லை என்றாலும்
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ
ஆ: மேற்கே மேற்கே தான் சூரியன்கள்.....

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 6/30/2006 08:08:00 AM | Permalink | 1 comments
Wednesday, May 24, 2006
படம் : கோடம்பாக்கம்
பாடியவர்கள் : ஹரீஷ் ராகவேந்திரா, ஹரிணி
இசை : சிற்பி

பல்லவி
======
ஆ: ரகசியமானது காதல் மிகமிக
ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம்தனை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகமனுபவிக்கும்
சுவாரசியமானது காதல் மிகமிக
சுவாரசியமானது காதல்

சரணம் - 1
==========
சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதில்லை மனமானது
சொல்லும் சொல்லைத் தேடித்தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை வெளிச்சததைப் போல அது சுதந்திரமானதுமல்ல
ஈரத்தை இருட்டினைப் போல அது ஒளிந்திடும் வெளிவரும் மெல்ல
(ரகசியமானது காதல்)

சரணம் - 2
=========
பெ கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத் தானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினைப் போல விரல் தொடுவதில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளைப் போல அதை உயிரினில் உணரணும் மெல்ல
(ரகசியமானது காதல்)

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/24/2006 09:50:00 AM | Permalink | 2 comments
Monday, May 22, 2006
படம் கன்னத்தில் முத்தமிட்டால்
பாடல் வைரமுத்து
பாடியவர் ஏ.ஆர். ரஹ்மான்
இசை ஏ.ஆர். ரஹ்மான்

பல்லவி
======
வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்ணில் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுதல் சிரிப்பில்
(வெள்ளைப் பூக்கள்)

பல்லவி - 1
==========
காற்றின் பேரசைவும் மழை பாடும் பாடல்களும்
ஒரு மெளனம் போல் இன்பம் தருமோ ஓஓஓஓஒ
கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ ஓஓ
ஆ ஹா ஹா ஹா
(வெள்ளைப் பூக்கள்..)


பல்லவி - 2
==========
எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே
(வெள்ளைப் பூக்கள்)

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/22/2006 07:26:00 AM | Permalink | 0 comments