Wednesday, August 27, 2008
படம்: பிரதாப்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா
இசை:

பல்லவி
=======
=
குழு: தனனா      பெ: ஆஹா ஆ ஆ
குழு: தனனா தனனா தனனா தனனா
பெ: ஆ ஆ ஆ      குழு:  தனனா தனனா
பெ: என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்
ஆ: என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
பெ: என் பெண்மை எல்லம் உந்தன் சீதனம்
ஆ: உன் சீதனங்கள் என்ன நூதனம்
பெ: முடியவில்லை காதல் க‌ண்ணா  மோக நர்த்தனம்
         விடிய விடியக் கேட்குதையா உனது கீர்த்தனம்
ஆ:  சொர்க்கம் தாண்டிச் செல்லுமம்மா எனது சொப்பனம்
        போகப் போகக் காண வேண்டும் புதிய தரிசனம்

குழு: தனனா
பெ: என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்
குழு: தனனா
ஆ: என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்

சரணம் 1
========

குழு: தானனா தஜிம் தஜீம் தஜீம் ஜீம்
பெ: தானன த‌ந்தானன தஜீம் தஜீம்
ஆ: தஜீம் தஜீம்
பெ: ஓ காதல் கண்ணாளா இன்று என்ன பொன்னாளா
       நீ மறந்து கையோடு கை சேர்க்கும் காதல் விழா
ஆ: ஓ கன்னிப் புறாவே கால் முளைத்த நிலாவே
       மெல்ல மெல்ல உன் பேரைச் சொன்னாலும் வாய் ஊறுதே
பெ: மல்லிகை மொட்டை மன்னவன் வந்து கிள்ளி முடித்தானே
ஆ: மன்மதன் என்னை வந்திடச் சொல்லித் தந்தி அடித்தானே
பெ: வல்லவனே
குழு: தந்தனனா
பெ: நல்லவனே
          கட்டிலில் ஆயிரம் கட்டளை இட்டவனே

குழு: தனனா
பெ: என் கண்ணனுக்கு காதல் வந்தனம்
குழு: தனனா
ஆ: என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
பெ: முடியவில்லை காதல் கண்ணா மோக நர்த்தனம்
ஆ: போகப் போகக் காண வேண்டும் புதிய தரிசனம்

சரணம் 2
=========

ஆ: ஓ ராஜகுமாரி ரகசிய சிருங்காரி
       மெல்ல எந்தன் காதோடு நீ பாடு கான‌ல் வரி
பெ: ஓ தேவ குமாரா கண்மயங்கும் சிங்காரா
        உன்னிரண்டு தோளோடு உறவாடும் காதல் புறா
ஆ: கட்டில் அறையில் கண்ணு முழிச்சா சொர்க்கம் கிட்டுமடி
பெ: அத்தானுக்கு அந்த விஷயம் எல்லாம் அத்துப்படி
ஆ: கட்டிப்புடி
குழு: தந்தனனா
ஆ: தொட்டுப் படி
       மூன்றாம் பாலில் முன்னோர் சொன்னபடி

பெ: என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்
ஆ: என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
பெ: என் பெண்மை எல்லாம் உந்தன் சீதனம்
ஆ: உன் சீதனங்கள் என்ன நூதனம்
பெ: முடியவில்லை காதல் கண்ணா மோக நர்த்தனம்
        விடிய விடியக் கேட்குதையா உனது கீர்த்தனம்
ஆ: சொர்க்கம் தாண்டிச் செல்லுமம்மா எனது சொப்பனம்
        போகப் போகக் காண வேண்டும் புதிய தரிசனம்

பெ: லல லால‌லா லால்லா லால்லா லா
ஆ: லா லலல்ல‌லா லால‌ல்லா லால்லா லாலா

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/27/2008 03:06:00 AM | Permalink | 0 comments
Monday, August 18, 2008
படம்: பரட்டை என்கிற அழகுசுந்தரம்
பாடியவர்: முகமது அஸ்லாம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா

பல்லவி
========‍‍

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் உன் கருவில்
மகனாகும் வரம் வேண்டும் தாயே
என் கடவுள் என் உலகம் நீயே
என் கடவுள் என் உலகம் நீயே

 (ஏழேழு ஜென்மம்..)

சரணம் 1
=========

தாய் பேசிடும் ஓர் வார்த்தை நாம்
விழுந்தாலும் நமைத் தாங்கும் தூணல்லவா
தாய் வீசிடும் ஓர் பார்வை தான்
நம் காயங்கள் குணமாக்கும் மருந்தல்லவா
ஊர் கண்கள் பட்டால் விரல் முறித்து நெறிப்பாள்
வெயில் உன்னை சுட்டால் சூரியனை எரிப்பாள்
மழைக்காலம் வந்தாலுமே முந்தானை குடையாகுமே

(ஏழேழு ஜென்மம்..)

சரணம் 2
=========

தேகம் இது தாய் தந்தது தாய்
இல்லாத நிமிடங்கள் நோய் தந்தது
தூரம் நம்மைப் பிரித்தாலுமே தாய்
நினைக்கின்ற நேரத்தில் புரை ஏறுது
தாய் அன்பில் தானே சுயநலங்கள் இல்லை
தாய் தொலைந்த வழியில் கால்தடங்கள் இல்லை
சொர்க்கங்கள் எங்குள்ளது தாய்மடியில் தானுள்ளது

(ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் ..)

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/18/2008 03:37:00 AM | Permalink | 0 comments
Tuesday, January 15, 2008
 
படம்: காளை
பாடியவர்: மதுஸ்ரீ
இசை: ஜி.வி.பிரகாஷ்
 
 
பல்லவி
======
 
எப்ப நீ என்னைப் பாப்ப
எப்ப என் பேச்சைக் கேப்ப
எப்ப நான் பேச கெட்ட பையா
 
எப்போடா கோபம் கொறையும்
எப்படா பாசம் தெரியும்
எப்ப நான் பேச கெட்ட பையா
 
(எப்ப நீ என்னைப்)
 
நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன்
நிஜமாக உந்தன் முன்னால் தடுமாடுறேன்
 
ஒரு செல்லா நாயாய் உந்தன் முன்னே வாலாட்டுறேன்
உன் செயலை எல்லாம் தூரம் நின்று பாராட்டுறேன்
என்னை ஒரு முறை நீயும் திரும்பிப் பார்ப்பாயா
 
ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ
 
 
சரணம்-1
========
 
கண்ணைக் கட்டிக்கொண்டு உன் பின்னால்
காலம் முழுவதும் வருவேனே
உந்தன் பாதையில் பயமில்லை நீ வா
 
மலையை சுமக்கிற பலமுனக்கு
மலரை ரசிக்கிற மனமுனக்கு
இனிமேல் போதும் நீ எனக்கு நீ வா
 
உன் துணை தேடி நான் வந்தேன் துரத்தாதேடா
உன் கோபம் கூட நியாயமென்று ரசித்தேனடா
 
நீ தீயாயிரு எனைத் திரியாய்த் தொடு
நான் ஒளி பெற்றே வாழ்வேனடா
 
அட என்னைத் தவிர எல்லாப் பேரும் ஆணாய் ஆனாலும்
நான் உனக்கு மட்டும் சொந்தம் என்றேன் என்ன ஆனாலும்
நீ இல்லை என்று சொல்லி விடேண்டா
 
எரிமலை கண்கள் ரெண்டு  பனிமலை இதயம் ஒன்று
உன்னிடம் கண்டேன் கெட்ட பையா
பூமியில் ஆம்பளை என்று உன்னை தான் சொல்வேன் என்று
வேறென்ன சொல்ல கெட்ட பையா
 
உன்னாலே அச்சமின்றி நான் வாழவே
உன்கிட்ட அச்சப்பட்டு ஏன் சாகுறேன்
 
இந்தப் பூமிப்பந்தை தாண்டிப்போக முடியாதுடா
உன் அருகில் நின்றால் மரணம் கூட நெருங்காதடா
என் நிலவரம் உனக்குப் புரியவில்லையா
 
குழு: ஓ ஓ ஓ ஓ
 

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 1/15/2008 06:33:00 AM | Permalink | 0 comments