Wednesday, October 24, 2007

படம்: க‌ருப்ப‌சாமி குத்த‌கைதார‌ர்
பாடியவர்: பாம்பெ ஜெய‌ஸ்ரீ
இசை: தினா

பல்லவி
=======

பெ: உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து
    க‌ண்ணு ரெண்டும் க‌ண்ணீருக்கு வாக்க‌ப்ப‌ட்ட‌து
    ஒத்த‌ச் சொல்லு புத்திக்குள்ள‌ மாட்டிக்கிட்ட‌து
    த‌ப்பிச் சொல்ல‌க் கூடாதுன்னு கேட்டுக்கிட்ட‌து
    தேதித் தாளைப் போலே வீணே நாளும் கிழிய‌றேன்
    நான் தேர்வுத் தாளை க‌ண்ணீரால‌ ஏனோ எழுதுறேன்
    இது க‌ன‌வா ஆஆஆஆ... இல்லை நிஜ‌மா
    த‌ற்செய‌லா தாய் செய‌லா..
    நானும் இங்கு நானும் இல்லையே (உப்புக்க‌ல்லு) 
   

சரணம்‍‍‍‍‍ 1
=========

பெ: ஏதும் இல்லை வண்ண‌ம் என்று நானும் வாடினேன்
     நீ ஏழு வ‌ண்ண‌ வான‌வில்லாய் என்னை மாத்துன‌
    தாயும் இல்லை என்று உள்ள‌ம் நேற்று ஏங்கினேன்
    நீ தேடி வ‌ந்து நெய்த‌ அன்பால நின்று தாக்கினாய்
    க‌த்தி இன்றி ர‌த்த‌ம் இன்றிக் காய்ப்ப‌ட்ட‌வ‌ள்
    உன் க‌ண்க‌ள் செய்த‌ வைத்திய‌த்தால் ந‌ன்மைய‌டைகிறேன்
    மிச்சம் இன்றி மீதம் இன்றி சேத‌ப்ப‌ட்ட‌வ‌ள்
    உன் நிழ‌ல் கொடுத்த‌ தைரிய‌த்தால் உண்மைய‌றிகிறேன்

    உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து
    ஒத்த‌ச்சொல்லு புத்திக்குள்ள‌ மாட்டிக்கிட்ட‌து
    ஓ ஓ ஓ ஓஒ


சரணம் 2
=========

பெ: மீசை வைத்த‌ அன்னை போல‌ உன்னைக் காண்கிறேன்
     நீ பேசுகின்ற‌ வார்த்தை எல்லாம் வேத‌மாகுதே
     பாழ‌டைந்த‌ வீடு போல‌ அன்று தோன்றினேன்
     உன் பார்வை ப‌ட்ட‌ கார‌ண‌த்தால் கோல‌ம் மாறுதே
     க‌ட்டிலுண்டு மெத்தை உண்டு ஆன‌ போதிலும்
     உன் பாச‌ம் க‌ண்டு தூங்க‌வில்லை என‌து விழிகளே        
     தென்ற‌லுண்டு திங்க‌ளுண்டு ஆன‌ போதிலும்
     க‌ண் நாளும் இங்கு தீண்ட‌வில்லை உன‌து நினைவிலே
     (உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து)

 

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 10/24/2007 07:58:00 AM | Permalink |


0 Comments: