Friday, August 17, 2007

படம்: பீமா
பாடியவர்கள்: மதுஸ்ரீ, ஹரிஹரன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பல்லவி
=======

பெ: ரகசிய கனவுகள் ஜல் ஜல்
    என் இமைகளைக் கழுவுது சொல் சொல்
    இளமையில் இளமையில் ஜில் ஜில்
    என் இருதயம் நழுவுது செல் செல்
ஆ: முதல்பிழை போல் மனதினிலே விழுந்தது உனதுருவம்
    ஓ உதடுகளால் உனைப்படிப்பேன் இருந்திடு அரைநிமிடம்
    தொலைவது போல் தொலைவது தான் உலகில் உலகில் புனிதம்
குழு: இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே வந்து தொடுஅழகே
     தொடத் தொடக் குழைகிற சுகம் சுகமே
     கண் படப் படப் புதிர்களும் அவிழ்ந்திடுமே (இறகே இறகே)

சரணம்-1
========

பெ: மறுபடி ஒருமுறை பிறந்தேனே
    விரல்தொடப் புருவமும் சிவந்தேனே
    ஓ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ
    சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ
ஆ: சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல எனை சூட
    நரம்புகளோடு குறும்புகள் ஆடும் எழுதிய கணக்கு
    எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு

பெ: ரகசிய கனவுகள்   குழு: ஜல் ஜல்
பெ: என் இமைகளைக் கழுவுது  குழு: சொல் சொல்
பெ: இளமையில் இளமையில்  குழு: ஜில் ஜில்
பெ: என் இருதயம் நழுவுது செல் செல்

சரணம்-2
=========

ஆ: உயிரணு முழுவதும் உனைப் பேச உனைப்பேச
    இமை தொழும் நினைவுகள் அனல் வீச அனல் வீச
    ஓ நெனச்சாலே செவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ
    தலைவைத்து நான் தூங்கும் தலகாணிக் கூச்சம் நீ
பெ: எனதிரவினில் கசிகிற நிலவொளி நீயே படர்வாயே
    நெருங்குவதாலே நொறுங்கி விடாது இருபது வருடம்
    ஓ தவறுகளாலே தொடுகிற நீயும் அழகிய மிருகம்

ஆ: ரகசிய கனவுகள் ஜல் ஜல்…..
பெ: குயிலினமே குயிலினமே எனக்கொரு சிறகு கொடு
    முகிலினமே முகிலினமே முகவரி எழுதிக் கொடு
    அவனிடமே அவனிடமே எனது கனவை அனுப்பு
குழு: இறகே இறகே … (இறகே இறகே)

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/17/2007 08:18:00 AM | Permalink |


2 Comments:


At Friday, January 08, 2010 10:53:00 AM, Anonymous Anonymous

Your blog keeps getting better and better! Your older articles are not as good as newer ones you have a lot more creativity and originality now keep it up!

 

At Monday, January 18, 2010 7:39:00 PM, Blogger Raghavan alias Saravanan M

@Anonymous,

நன்றி பன்னீர் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும்.

தாங்கள் என்னுடைய ஏனைய பிற வலைப்பதிவுகளைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். எனில் எந்த வலைப்பதிவினைப் பற்றிச் சொல்கிறீர்கள்?