படம் : சொல்லாமலே
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை : பாபி
இயக்கம் : சசி
பல்லவி
======
சிந்தாமணியே வா சிறகை விரித்தேன் வா
மூன்றாம் பிறையே வா முழுதாய் மனதைத் தா
முதன்முதலாய் என்மனதில் பெண்முகம் பார்க்கிறேன்
எனதுயிரில் அவள் நுழையும் ஓசையைக் கேட்கிறேன்
சிறைக்கதவை உடைத்து விட்டுப் பறந்திடப் போகிறேன்
பறந்திடப் பறந்திடப் பறந்திடத் தடையில்லையே (சிந்தாமணியே வா)
சரணம்-1
=======
விழிகள் உனைப்பார்த்து சுகமாய்க் கலங்குதடி
உயிரே கரமாகி உன்னை வணங்குதடி
பெண்மையதன் மென்மையினை உன் ஸ்பரிசம் சொல்லியதே
என்னருகில் நீயிருந்தால் சூரியனும் குளிர்கிறதே
தேய்பிறையின் வாசலிலே பௌர்ணமிகள் துள்ளியதே
பறந்திடப் பறந்திடப் பறந்திடத் தடையில்லையே (சிந்தாமணியே வா)
சரணம்-2
=======
பூவைத் தேடி வந்தேன் புதையல் கிடைத்ததடி
பாதை தேடி வந்தேன் பாதம் கிடைத்ததடி
வெய்யிலிலே நீ நடந்தால் சூரியனை ஒளித்துவைப்பேன்
குடையெடுக்க நீ மறந்தால் மழையினையே நிறுத்திவைப்பேன்
எனதுயிரை மறந்துவிட்டேன் உனதுயிரில் கலந்துவிட்டேன்
பறந்திடப் பறந்திடப் பறந்திடத் தடையில்லையே (சிந்தாமணியே வா)
Labels: Movie-S, Song-S, இசை பாபி, இயக்குநர் சசி, எஸ். பி. பாலசுப்பிரமணியம்
« back home