Friday, August 29, 2008
படம்: சங்கமம்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்:  ஹரிஹரன், எம். எஸ். விஸ்வநாதன்
இசை: ஏ. ஆர். ரஹ்மான்

பல்லவி
=======

ஆ: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
       மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
       உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
      உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
      (மழைத்துளி மழைத்துளி..)
      ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌
       என்ன ஆடாம ஆட்டி வைச்ச வணக்கமுங்க‌
       என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
       என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைகள் வெல்லும் வரைக்கும்
       (என் காலுக்கு சலங்கையிட்ட)
      நீ உண்டு உண்டு என்றபோதும் அட இல்லை இல்லை என்றபோதும்
     சபை ஆடிய பாதமய்யா அது நிக்காது ஒருபோதும்

       (ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)

      (மழைத்துளி மழைத்துளி...)

சரணம் 1
========

ஆ: தண்ணியில மீனழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்லை
       எனக்குள்ள நானழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல‌
       என் கண்ணீ் ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரமாகுமே
       சபதம் சபதம் என்றே சலங்கை பாடுமே
        ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
      மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
     விழியே விழியே இமையே தீயும் போதும் கலங்காதிரு
     கங்கை நதி அத்தனையும் கடலில் சங்கமம்
     நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
     கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்

     (மழைத்துளி மழைத்துளி...)

   (ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)


சரணம் 2
========

(எம். எஸ். விஸ்வநாதன்)
ஆ:  தந்தான தந்தானனா..
        மழைக்காகத் தான் மேகம்  அட கலைக்காகத் தான் நீயும்
         உயிர்  கலந்தாடுவோம் நாளும் மகனே வா
         நீ சொந்தக் காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
        இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா
         ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
         தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்

        புலிகள் அழுவது ஏது  அட பறவையும் அழ அறியாது
        போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது

         மகனே மகனே காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது
         கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது

ஹரி: ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌
விஸ்: என்னை ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க‌
ஹரி: என் காலுக்குச் சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல்வணக்கம்
விஸ்: என் கால் நடமாடுமையா நம்ம கட்டளைகள் வெல்லும்வரைக்கும்
ஹரி: நீ உண்டு உண்டு என்ற போதும்
விஸ்: நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
              சபை ஆடிய பாதமையா அது நிக்காது ஒருபோதும்

ஹரி: மழைத்துளி மழைத்துளி...

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/29/2008 07:06:00 AM | Permalink | 2 comments
Monday, July 07, 2008
படம்: சுப்பிரமணியபுரம்
பாடியவர்கள்: பெல்லி ராஜ், தீபா மரியம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்

பல்லவி
========

ஆ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
       என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்
       சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
       என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
       (கண்கள் இரண்டால் உன்)

பெ: பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்
        பின்பு பார்வை போதும் எனநான் நினைத்தே நகர்வேனே மாற்றி
        கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
        ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
        ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
        இதை இருளிலும் படித்திட முடிகிறதே

சரணம் 1
=========

ஆ: இரவும் அல்லாத பகலும் அல்லாத‌
        பொழுதுகள் உன்னோடு கழியுமா
        தொடவும் கூடாத படவும் கூடாத‌
        இடைவெளி அப்போது குறையுமா
பெ: மடியினில் சாய்ந்திடத் துடிக்குதே
         மறுபுறம் நாணமும் தடுக்குதே
         இதுவரை யாரிடமும் சொல்லாத கதை

ஆ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
       என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்
       சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
       என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

சரணம் 2
=========

பெ: கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத‌
         மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
         உடலும் அல்லாத உருவம் கொள்ளாத‌
         கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்
ஆ:  உனையன்றி வேறொரு நினைவில்லை
         இனி இந்த ஊனுயிர் எனதில்லை
         தடையில்லை சாவிலுமே உன்னோடு வர‌

பெ: கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
          ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
          ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
         இதை இருளிலும் படித்திட முடிகிறதே
ஆ: பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்
         பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே
         நகர்வேனே மாற்றி
பெ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
         என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென‌
ஆ:  சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
       என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

நன்றி: இந்த அருமையான பாடலை எனக்கு அறிமுகம் செய்த தோழி காயத்ரிக்கும், பாடலைத் தரவிறக்கம் செய்து அனுப்பிய‌ அலுவலக நண்பர் திவாகருக்கும்!

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 7/07/2008 02:02:00 AM | Permalink | 0 comments
Wednesday, August 22, 2007
 
பாடலைப் பற்றிய குறிப்பு:
 
ஆனந்த விகடனில் இப்படத்தின் இயக்குநர் வசந்த் அளித்த பேட்டியில், "பாடலாசிரியார் நா.முத்துக்குமார் எழுதியிருக்கும் இந்தப்பாடல் இனிமேல் ஒரு அருமையான தாலாட்டுப் பாட்டாக விளங்கப்போகிறது" என்று. (வரிகள் அப்படியே நினைவில்லை).
 
 
படம்         : சத்தம் போடாதே
பாடியவர்: ஷங்கர் மஹாதேவன்
பாடல்      : நா.முத்துக்குமார்
இசை       : யுவன்ஷங்கர்ராஜா

பல்லவி
========

பெ: ஹே ஹே ஹே        ஆ: ஹே ஹே
பெ: ஹோ ஹோ ஹோ ஆ: ஹோ ஹோ
பெ: லா லா லா                 ஆ: ம்ஹீம் ம்ஹீம் (ஹே ஹே ஹே)

ஆ: அழகுக் குட்டிச் செல்லம் உன்னை அள்ளித் தூக்கும் போது
    உன் பிஞ்சுவிரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்
    ஆளைக் கடத்திப் போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில்
    விரும்பி மாட்டிக் கொண்டேன் நான் திரும்பிப் போக மாட்டேன்
    அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி
    உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்குப் பேசத் தெரியல‌
    எனக்குத் தெரிந்த பாஷை பேச உனக்குத் தெரியவில்லை
    இருந்தும் நமக்குள் இது என்ன புதுப்பேச்சு
    இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

குழு: ஜிஞ்சலேஞ்ச ஜிஞ்சலேஞ்ச‌ ஜிஞ்சலி
    மஞ்சரிஞ்ச மஞ்சரிஞ்ச மஞ்சரி (அழகுக் குட்டிச் செல்லம்)

சரணம்‍‍‍-1
=======

ஆ: ரோஜாப்பூ கைரெண்டும் காற்றோடு கதைபேசும்
    உன் பின்னழகில் பெளர்ணமிகள் தகதிமிதா ஜதிபேசும்
    எந்த நேரம் ஓயாத அழுகை
    ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
    எப்போதும் இவன் மீது பால்வாசனை
    என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
    எந்த நாட்டைப் பிடித்துவிட்டான் இப்படி ஓர்
    அட்டினக்கால் தோரணை தோரணை

குழு: ஜிஞ்சலிஞ்ச ஜிஞ்சலிஞ்ச ஜிஞ்சலி....
ஆ: அழகுக் குட்டிச் செல்லம்..

சரணம்‍-2
=======

ஆ: நீ தின்ற மண்சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
    நீ சிணுங்கும் மொழிகேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
    தண்டவாளம் இல்லாத ரயிலை
    தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
    வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
    கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
    ஒளிந்து ஒளிந்து போக்குக் காட்டி ஓடுகின்ற
    கண்ணனே புன்னகை மன்னனே

குழு: ஜிஞ்சலிஞ்ச..
ஆ, குழு: அழகுக் குட்டிச் செல்லம்..
ஆ: அம்மு நீ என் பொம்மு நீ.....
ஆ, குழு: ஜிஞ்சலிஞ்ச...
ஆ: அழகுக் குட்டிச் செல்லம்..
 
 

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/22/2007 11:27:00 PM | Permalink | 5 comments
Tuesday, May 08, 2007
படம்               : சொல்லாமலே
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை              : பாபி
இயக்கம்         : சசி
 
பல்லவி
======
சிந்தாமணியே வா சிறகை விரித்தேன் வா
மூன்றாம் பிறையே வா முழுதாய் மனதைத் தா
முதன்முதலாய் என்மனதில் பெண்முகம் பார்க்கிறேன்
எனதுயிரில் அவள் நுழையும் ஓசையைக் கேட்கிறேன்
சிறைக்கதவை உடைத்து விட்டுப் பறந்திடப் போகிறேன்
பறந்திடப் பறந்திடப் பறந்திடத் தடையில்லையே (சிந்தாமணியே வா)
 
 
சரணம்-1
=======
விழிகள் உனைப்பார்த்து சுகமாய்க் கலங்குதடி
உயிரே கரமாகி உன்னை வணங்குதடி
பெண்மையதன் மென்மையினை உன் ஸ்பரிசம் சொல்லியதே
என்னருகில் நீயிருந்தால் சூரியனும் குளிர்கிறதே
தேய்பிறையின் வாசலிலே பௌர்ணமிகள் துள்ளியதே
பறந்திடப் பறந்திடப் பறந்திடத் தடையில்லையே (சிந்தாமணியே வா)
 
 
சரணம்-2
=======
பூவைத் தேடி வந்தேன் புதையல் கிடைத்ததடி
பாதை தேடி வந்தேன் பாதம் கிடைத்ததடி
வெய்யிலிலே நீ நடந்தால் சூரியனை ஒளித்துவைப்பேன்
குடையெடுக்க நீ மறந்தால் மழையினையே நிறுத்திவைப்பேன்
எனதுயிரை மறந்துவிட்டேன் உனதுயிரில் கலந்துவிட்டேன்
பறந்திடப் பறந்திடப் பறந்திடத் தடையில்லையே (சிந்தாமணியே வா)
 

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/08/2007 04:31:00 AM | Permalink | 0 comments
Tuesday, April 10, 2007
படம் : சிவாஜி
பாடியவர்கள் : ஹரிஹரன், மதுஸ்ரீ
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடல் : வைரமுத்து

பல்லவி
========
: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னைகையோ வவ்வல் வவ்வல்
உன் பூவிழிப் பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் பதறுமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி
பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
அன்பா வாளையெடு அழகை சாணையிடு
உன்ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு
ஆ: அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு
பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
ஆ: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ வவ்வல் வவ்வல்

சரணம்-1
=========
பெ: ஹோ.. ஆ..ஆ..ஆ..
ஆ: ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான்
என் தேன்நிலவே ஒரு நிலவுடன் தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்
பெ: புன்னகைப் பேரரசே தேன்குளத்துப்
பூவுக்குள் குளிப்பீரா ஆ..(புன்னகைப் பேரரசே)
விடியும்வரை மார்புக்குள் இருப்பீரா
விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வீரா
ஆ: ஓ.. பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம்
செயல்புயல் நானடி
பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
ஆ: பூம்பாவாய்..

சரணம்-2
=======
ஆ: பொன் வாக்கியமே வாய் வாத்தியமே
உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்
வந்து ஒளிந்து கொண்டேன் சுகம்சுகம் கண்டேன்
பெ: ஆனந்த வெறியில் நான் ஆடைகளில்
பூமியை முடிந்து கொண்டேன்
விண்வெளியில் ஜதிசொல்லி ஆடி
வெண்ணிலவைச் சகதியும் ஆக்கிவிட்டேன்
ஆ: அடடடா குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ

பெ: வாஜி.வா வா வா வா..
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி)
ஆ: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்....

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/10/2007 08:55:00 AM | Permalink | 6 comments