Monday, November 11, 2013
படம்: தலைவா
பாடியவர்கள்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி
பாடல் : நா. முத்துக்குமார்
இசை : ஜி.வி. பிரகாஷ்

சரணம்
--------------
ஆ: யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
        காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
பெ: யார் எந்தன் வார்த்தை மீது மெளனம் வைத்தது
         இன்று பேசாமல் கண்கள் பேசுது
ஆ: நகராமல் இந்த நொடி நீள
        எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
பெ: குளிராலும் கொஞ்சம் அனலாலும்
         இந்த நெருக்கம் தான் கொல்லுதே
ஆ:  எந்தன் நாளானது இன்று வேறானது
         வண்ணம் நூறானது வானிலே
        (யார் இந்த சாலையோரம்..)

பல்லவி 1
----------------
ஆ: தீரத் தீர ஆசை யாவும் பேசலாம்
        மெல்ல தூரம் விலகிப்  போகும் வரையில் தள்ளி நிற்கலாம்
பெ: என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
         இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்
ஆ:  என்னாகிறேன் இன்று ஏதாகிறேன்
பெ: எதிர் காற்றிலே சாயும் குடையாகிறேன்
ஆ: எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
         அது பறந்தோடுது வானிலே
பெ: (யார் எந்தன் வார்த்தை மீது....)

பல்லவி 2
-----------------
ஆ: மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
         அது மலையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே
பெ: வைரம் போலப் பெண்ணின் மனது உலகிலே
         அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே
ஆ:  கண் ஜாடையில் உன்னை அறிந்தேனடி
பெ:  என் பாதையில் இன்று உன் காலடி
ஆ:  நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்ப்பதும்
          நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி
   
ஆ: யார் இந்த சாலையோரம்..
பெ: யார் எந்தன் வார்த்தை மீது...
ஆ: நகராமல்..
பெ: குளிராலும்..
ஆ: எந்தன் நாளானது இன்று வேறானது
         வண்ணம் நூறானது வானிலே


 -- மு. இராகவன் என்ற சரவணன்
    11 நவம்பர் 2013 திங்கள் இரவு 11 50 மணி (இந்திய நேரப்படி)
     நவி மும்பை | மகாராஷ்டிரா | இந்தியா

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/11/2013 10:40:00 AM | Permalink | 1 comments
Wednesday, August 22, 2007
 
பாடலைப் பற்றிய குறிப்பு:
 
ஆனந்த விகடனில் இப்படத்தின் இயக்குநர் வசந்த் அளித்த பேட்டியில், "பாடலாசிரியார் நா.முத்துக்குமார் எழுதியிருக்கும் இந்தப்பாடல் இனிமேல் ஒரு அருமையான தாலாட்டுப் பாட்டாக விளங்கப்போகிறது" என்று. (வரிகள் அப்படியே நினைவில்லை).
 
 
படம்         : சத்தம் போடாதே
பாடியவர்: ஷங்கர் மஹாதேவன்
பாடல்      : நா.முத்துக்குமார்
இசை       : யுவன்ஷங்கர்ராஜா

பல்லவி
========

பெ: ஹே ஹே ஹே        ஆ: ஹே ஹே
பெ: ஹோ ஹோ ஹோ ஆ: ஹோ ஹோ
பெ: லா லா லா                 ஆ: ம்ஹீம் ம்ஹீம் (ஹே ஹே ஹே)

ஆ: அழகுக் குட்டிச் செல்லம் உன்னை அள்ளித் தூக்கும் போது
    உன் பிஞ்சுவிரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்
    ஆளைக் கடத்திப் போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில்
    விரும்பி மாட்டிக் கொண்டேன் நான் திரும்பிப் போக மாட்டேன்
    அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி
    உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்குப் பேசத் தெரியல‌
    எனக்குத் தெரிந்த பாஷை பேச உனக்குத் தெரியவில்லை
    இருந்தும் நமக்குள் இது என்ன புதுப்பேச்சு
    இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

குழு: ஜிஞ்சலேஞ்ச ஜிஞ்சலேஞ்ச‌ ஜிஞ்சலி
    மஞ்சரிஞ்ச மஞ்சரிஞ்ச மஞ்சரி (அழகுக் குட்டிச் செல்லம்)

சரணம்‍‍‍-1
=======

ஆ: ரோஜாப்பூ கைரெண்டும் காற்றோடு கதைபேசும்
    உன் பின்னழகில் பெளர்ணமிகள் தகதிமிதா ஜதிபேசும்
    எந்த நேரம் ஓயாத அழுகை
    ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
    எப்போதும் இவன் மீது பால்வாசனை
    என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
    எந்த நாட்டைப் பிடித்துவிட்டான் இப்படி ஓர்
    அட்டினக்கால் தோரணை தோரணை

குழு: ஜிஞ்சலிஞ்ச ஜிஞ்சலிஞ்ச ஜிஞ்சலி....
ஆ: அழகுக் குட்டிச் செல்லம்..

சரணம்‍-2
=======

ஆ: நீ தின்ற மண்சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
    நீ சிணுங்கும் மொழிகேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
    தண்டவாளம் இல்லாத ரயிலை
    தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
    வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
    கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
    ஒளிந்து ஒளிந்து போக்குக் காட்டி ஓடுகின்ற
    கண்ணனே புன்னகை மன்னனே

குழு: ஜிஞ்சலிஞ்ச..
ஆ, குழு: அழகுக் குட்டிச் செல்லம்..
ஆ: அம்மு நீ என் பொம்மு நீ.....
ஆ, குழு: ஜிஞ்சலிஞ்ச...
ஆ: அழகுக் குட்டிச் செல்லம்..
 
 

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/22/2007 11:27:00 PM | Permalink | 5 comments
Tuesday, May 23, 2006
படம் : கஜினி
பாடல் : நா.முத்துக்குமார்
பாடியவர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி, பாம்பே ஜெயஸ்ரீ
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

பல்லவி
======
ஆ: சுட்டும் விழிச் சுடரே சுட்டும் விழிச் சுடரே
என் உலகம் உன்னைச் சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம் தொட்டுத் தொட்டு உரச
என் இதயம் பற்றிக் கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன்
கண் விழித்து சொப்பனம் கண்டேன் உன்னாலே
கண் விழித்து சொப்பனம் கண்டேன்
(சுட்டும் விழிச் சுடரே ...)

சரணம் - 1
=========
ஆ: மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்
பெ: தூக்கத்தில் உளறல் கொண்டேன்
தூறலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவைக் கொண்டேன்
ஆ: கருப்பு வெள்ளைப் பூக்கள் உண்டா
உன் கண்ணில் நான் கண்டேன்
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன் (உன் கண்கள்)
பெ: சுட்டும் விழிச் சுடரே..

சரணம் - 2
==========
பெ: மரங்கொத்திப் பறவை ஒன்று
மனங்கொத்திப் போனதென்று
உடல் முதல் உயிர்வரை தந்தேன்
ஆ: தீயின்றித் திரியும் இன்றி
தேகங்கள் எரியும் என்று
இன்று தானே நானும் கண்டு கொண்டேன்
பெ: மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும் போது மழை அழகு
கண்ணாலே கோபப்பட்டால் வெயில் அழகு (கண்ணாலே)
ஆ: சுட்டும் விழிச் சுடரே......

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/23/2006 07:05:00 AM | Permalink | 0 comments