பாடியவர்: ஷங்கர் மஹாதேவன்
பாடல் : நா.முத்துக்குமார்
இசை : யுவன்ஷங்கர்ராஜா
பல்லவி
========
பெ: ஹே ஹே ஹே ஆ: ஹே ஹே
பெ: ஹோ ஹோ ஹோ ஆ: ஹோ ஹோ
பெ: லா லா லா ஆ: ம்ஹீம் ம்ஹீம் (ஹே ஹே ஹே)
ஆ: அழகுக் குட்டிச் செல்லம் உன்னை அள்ளித் தூக்கும் போது
உன் பிஞ்சுவிரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளைக் கடத்திப் போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக் கொண்டேன் நான் திரும்பிப் போக மாட்டேன்
அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி
உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்குப் பேசத் தெரியல
எனக்குத் தெரிந்த பாஷை பேச உனக்குத் தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புதுப்பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி
குழு: ஜிஞ்சலேஞ்ச ஜிஞ்சலேஞ்ச ஜிஞ்சலி
மஞ்சரிஞ்ச மஞ்சரிஞ்ச மஞ்சரி (அழகுக் குட்டிச் செல்லம்)
சரணம்-1
=======
ஆ: ரோஜாப்பூ கைரெண்டும் காற்றோடு கதைபேசும்
உன் பின்னழகில் பெளர்ணமிகள் தகதிமிதா ஜதிபேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை
ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால்வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டைப் பிடித்துவிட்டான் இப்படி ஓர்
அட்டினக்கால் தோரணை தோரணை
குழு: ஜிஞ்சலிஞ்ச ஜிஞ்சலிஞ்ச ஜிஞ்சலி....
ஆ: அழகுக் குட்டிச் செல்லம்..
சரணம்-2
=======
ஆ: நீ தின்ற மண்சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சிணுங்கும் மொழிகேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத ரயிலை
தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்குக் காட்டி ஓடுகின்ற
கண்ணனே புன்னகை மன்னனே
ஆ, குழு: அழகுக் குட்டிச் செல்லம்..
ஆ: அம்மு நீ என் பொம்மு நீ.....
ஆ, குழு: ஜிஞ்சலிஞ்ச...
ஆ: அழகுக் குட்டிச் செல்லம்..
Labels: Movie-S, Song-A, இசை யுவன்ஷங்கர்ராஜா, இயக்குநர் வசந்த், நா.முத்துக்குமார், படம்-"சத்தம் போடாதே", ஷங்கர் மஹாதேவன்
from where u r getting this lyric pa mail em to gmail