Thursday, May 03, 2007
படம்: தீபாவளி
பாடியவர்கள்:
மதுஸ்ரீ, அனுராதாஸ்ரீராம்
இசை: யுவன்ஷங்கர்ராஜா
இயக்குநர்: எழில்


பல்லவி
======
மதுஸ்ரீ:
கண்ணன் வரும்வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம் அதை ஏற்கநின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள் றெக்கை விரிக்கும் ரெண்டுவிழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே (கண்ணன் வரும்வேளை)


சரணம்-1
=======
அனுராதா ஸ்ரீராம்:
வான்கோழி கொள்ளும் ஆசை யாழில் தோற்பது
தைமாசம் கொள்ளும் ஆசை கூடிப் பார்ப்பது
தேர்க்கால்கள் கொள்ளும் ஆசை வீதி சேர்வது
ஓரீசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது
கூறவா இங்கு எனது ஆசையை தோழனே வந்து உளறு மீதியை
கோடிக் கோடி ஆசை தீரும் மாலை
மதுஸ்ரீ: கண்ணன் வரும்வேளை..



சரணம்-2
========
அனுராதா ஸ்ரீராம்:
பூவாசம் தென்றலோடு சேரவேண்டுமே
ஆண்வாசம் தொட்டிடாத தேகம் ஊனமே
தாய்ப்பாசம் பத்துமாதம் பாரம் தாங்குமே வாழ்நாளின் மிச்சபாரம் காதல் எழுதுமே
நீண்டநாள் கண்ட கனவு தீரவே தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே
நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே (கண்ணன் வரும்வேளை)

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/03/2007 12:22:00 AM | Permalink |


4 Comments:


At Thursday, July 12, 2007 7:13:00 AM, Blogger Sadish

ஏன் நைனா,

பாட்டை எழுதினவர் பேரைப் போடுறது ரொம்ப முக்கியமில்லையா?

 

At Tuesday, August 21, 2007 5:01:00 AM, Blogger Raghavan alias Saravanan M

@sadish,

நன்றி வருகைக்கு.

தெரிந்திருந்தால் நிச்சயமாய்ப் போட்டிருப்பேன் தலைவா..
உங்களுக்குத் தெரிஞ்சா காத்துவாக்குல சொல்லிப்போறது....?

 

At Wednesday, October 14, 2020 6:00:00 PM, Blogger Unknown

யுகபாரதி.

எல்லா தளங்களும் இந்த அநியாயத்தை பண்றாங்க... இசை, நடிகர் பேர் போடுறாங்க, ஆனா பாடலாசிரியர் பெயர் போடுறது இல்ல.

 

At Wednesday, October 14, 2020 6:00:00 PM, Blogger Unknown

யுகபாரதி