Tuesday, April 10, 2007
படம் : சிவாஜி
பாடியவர்கள் : ஹரிஹரன், மதுஸ்ரீ
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடல் : வைரமுத்து

பல்லவி
========
: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னைகையோ வவ்வல் வவ்வல்
உன் பூவிழிப் பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் பதறுமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி
பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
அன்பா வாளையெடு அழகை சாணையிடு
உன்ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு
ஆ: அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு
பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
ஆ: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ வவ்வல் வவ்வல்

சரணம்-1
=========
பெ: ஹோ.. ஆ..ஆ..ஆ..
ஆ: ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான்
என் தேன்நிலவே ஒரு நிலவுடன் தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்
பெ: புன்னகைப் பேரரசே தேன்குளத்துப்
பூவுக்குள் குளிப்பீரா ஆ..(புன்னகைப் பேரரசே)
விடியும்வரை மார்புக்குள் இருப்பீரா
விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வீரா
ஆ: ஓ.. பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம்
செயல்புயல் நானடி
பெ: வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
ஆ: பூம்பாவாய்..

சரணம்-2
=======
ஆ: பொன் வாக்கியமே வாய் வாத்தியமே
உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்
வந்து ஒளிந்து கொண்டேன் சுகம்சுகம் கண்டேன்
பெ: ஆனந்த வெறியில் நான் ஆடைகளில்
பூமியை முடிந்து கொண்டேன்
விண்வெளியில் ஜதிசொல்லி ஆடி
வெண்ணிலவைச் சகதியும் ஆக்கிவிட்டேன்
ஆ: அடடடா குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ

பெ: வாஜி.வா வா வா வா..
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி)
ஆ: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்....

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/10/2007 08:55:00 AM | Permalink |


6 Comments:


At Wednesday, April 11, 2007 7:58:00 AM, Blogger Porkodi (பொற்கொடி)

paatukku lyrics podave oru thani bloga! kalakringa :-) adhu enanga en kadaila vandhu pazhaiya postku comment potrukinga?! :-/ apo nijamave naan ezhudinadhu publish agalainga, unga goyindhu kitta sollunga!

 

At Wednesday, April 11, 2007 8:10:00 PM, Blogger Raghavan alias Saravanan M

@பொற்கொடி,

நன்றி உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

//paatukku lyrics podave oru thani bloga! kalakringa :-) //
நன்றிங்க.. இது நம்மளோட ஒரு வகையான பொழுதுபோக்குங்க.. கூடவே ஒரு மனநிறைவும் கிடைக்குதுங்க.. அதுனால தான்....ஹி ஹி ஹி...

//adhu enanga en kadaila vandhu pazhaiya postku comment potrukinga?! :-/ //
நான் பார்த்ததிலே அந்த பதிவினைத் தான் என்னை ஈர்த்ததென்பேன் என்னை ஈர்த்ததென்பேன்.. மற்ற பதிவுகளைப் பிறகு பார்வையிடுகிறேன்.. ;-)

//apo nijamave naan ezhudinadhu publish agalainga, unga goyindhu kitta sollunga!//
நம்பறேன்.. நம்பறேன்.. டேய் கோயிந்து.. ஹய்யோ.. ஹய்யோ. இவங்க பதிவு பண்ணுனது உண்மையிலேயே வலையேறலியாம்ல... சர்த்தான்... வுட்டுடலாம்... ;-)

 

At Friday, July 27, 2007 12:28:00 AM, Anonymous Anonymous

அய்யா,

இந்த சிவாஜி பாடல் வரிகளைத்தந்ததற்கு மிக்க நன்றி.

அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

ஒரு சந்தேகம் -
//// அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு ///

இது, "கொல்லு" வா இல்லை, 'கொள்ளு" வா? ஆதாரமான ஏதாவது இடத்தில் விசாரித்து சொல்ல முடியுமா. இரண்டுக்கும் வேறு பொருள் இருப்பது நான் சொல்ல வேண்டியதில்லை.

 

At Tuesday, August 14, 2007 10:12:00 AM, Blogger Raghavan alias Saravanan M

@ Anonymous,

வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி அனானி அவர்களே.

என் சிற்றறிவுக்கு எட்டியவரையும், நான் கேள்விப்பட்ட வரைக்கும், அது "நெஞ்சில் முட்டிக் கொல்லு" என்பது தான்.

ரெட்டைத்திமிரை வைத்து என் நெஞ்சில் முட்டி என்னைக் கொல்லு! என்பதாக அர்த்தம்.. ஹரிஹரனின் குரலும் அப்படியே வருகிறதே!!

 

At Tuesday, September 25, 2007 3:06:00 PM, Anonymous Anonymous

Sir, paatu nalla type pannirukeenga.. but oru variyil neengal vavval vavval endru kuripittu ullergal.. athu vavval vavall illai mavval mavval enbathu en karuthu.. mavval enbathu oru vahai poo...

 

At Wednesday, September 26, 2007 12:41:00 AM, Blogger Raghavan alias Saravanan M

@anonymous,

நன்றி..

நீங்கள் சொன்னது மிகவும் சரி. அது 'மவ்வல்' என்பதே. நான் முதன் முதலில் கேட்ட போது தட்டச்சியது, பிறகு சரிசெய்ய மறந்து விட்டேன்.

உங்கள் வரவு நல்வரவாயிற்று.