Thursday, April 12, 2007

படம்                : தீபாவளி
பாடியவர்கள்  : யுவன்ஷங்கர்ராஜா
இசை               : யுவன்ஷங்கர்ராஜா
 
 
பல்லவி
======
ஆ: போகாதே போகாதே நீயிருந்தால் நானிருப்பேன்
      போகாதே போகாதே நீபிரிந்தால் நான் இறப்பேன்
      உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும் 
      கனவாய் எனை மூடுதடி
      யாரென்று நீயும் எனைப்பார்க்கும் போது
      உயிரே உயிர் போகுதடி
      கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து
      உந்தன் முகம் பார்ப்பேனடி (போகாதே போகாதே)
 
 
சரணம்-1
=======
ஆ: கலைந்தாலும் மேகம் அது மீண்டும் இருக்கும்
      அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்
      நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
      நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு
      உனக்காகக் காத்திருப்பேன் ஓஹோஹோ
      உயிரோடு பார்த்திருப்பேன் ஓஹோஹோ (போகாதே போகாதே)
 
 
சரணம்-2
=======
ஆ:  அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
       அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
       கண்தூங்கும் நேரம் பார்த்துக் கடவுள் வந்து போனதுபோல்
       என்வாழ்வில் வந்தே வானாய் ஏமாற்றம் தாங்கலையே
       பெண்ணே நீ இல்லாமல்ல்ல்ல்..
       பூலோகம் இருட்டிடுதேஏஏஏ... (போகாதே போகாதே)

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/12/2007 08:06:00 AM | Permalink |


0 Comments: