Friday, October 05, 2007
பாடல்: ஏன் இன்னும் மெளனம்
ஆல்பம்: தென்றலாய் வந்தாய்
 
பல்லவி
======
பெ: ஏன் இன்னும் மெளனம் நீ பேசவில்லை
      ஏன் என்று சொல்லு என் கண்ணனே
      ஏன் இன்னும் என்னை நீ பார்க்கவில்லை
      ஏன் உந்தன் பாசம் நான் பெறவில்லை
      என் நெஞ்சம் அது துடிக்கின்றது
      உன் பேரை அது அழைக்கின்றது
      எனைச் சேராயோ கண்ணா ஆஆ (ஏன் இன்னும் மெளனம்) 
 
சரணம்-1
=======
பெ: நெஞ்சே ஆசை கொள்ளை இன்பம்
       நாளும் அது உன்பேரைச் சொல்லித் தாவிப்போனது
      அன்பில் உனைச் சேராது உள்ளம் உனைத் தீண்டாது
       ஏனோ மனம் எந்நாளும் உந்தன் நிழலாய்ப் போனது
       வானம் எனது பூமி ஏனோ நீயும் எனது காதல் ஏனோ
       இதயத்தில் தினம் காதல் பூக்கள் பூத்தபடி கண்ணா
       காதலை தினம் கொண்டாடச் சொல்லி சொன்னது கண்ணா
       தேவன் உனை நான் பார்த்த பின்னே நெஞ்சம் மூழ்கிப் போனேன்
       காதலில் தினம் உன்பேரைச் சொல்லி கவிதைகள் ஆயிரம் சொன்னேன்
       (ஏன் இன்னும் மெளனம் நீ பேசவில்லை)
 
சரணம்-2
=======
பெ: பூ சிறு பூ என்னை அள்ளிக் கொள்ளக் கூடாதா உன் கையில்
      தேன் துளி தேன் நான் உன்னை சேரலாகாதா என் கண்ணா
      இரவோ இனிமை நிலவோ பசுமை
      ஆனந்தம் இல்லை நான் தேடி வந்தேன் நீ வரவில்லை நான் பேசவில்லை
      கண் விழித்தால் உன் ஞாபகம் கண் மூடினால் உன் ஞாபகம்
      ஏன் ஏன் நீ வரவில்லை கண்ணா நீ வந்து நீரூற்று என் நெஞ்சிலே
      (ஏன் இன்னும் மெளனம் நீ பேசவில்லை)
 

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 10/05/2007 07:22:00 AM | Permalink |


10 Comments:


At Friday, October 05, 2007 7:31:00 AM, Anonymous Anonymous

Thanks for posting the song!!!

 

At Friday, October 05, 2007 7:50:00 AM, Blogger Raghavan alias Saravanan M

@anonymous,

//Thanks for posting the song!!!//

You are welcome Dhanajeyan! :)

 

At Thursday, November 01, 2007 12:26:00 PM, Blogger Chandravathanaa

வணக்கம் சரவணன்(இராகவன்)

உங்களது இந்த வலைப்பதிவை அறிமுகப் படுத்தியதற்கு மிகவும் நன்றி.

இந்தப் பாடலை எங்கே எடுத்தீர்கள்? நீண்ட காலங்களாக ஒலி வடிவில் பெற்றுக் கொள்ள முயல்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை. வரிகளை இங்கு பார்க்க முடிந்ததில் சந்தோசமாக உள்ளது.

இது தமிழினி பாடிய பாடல் அல்லவா? எப்படி உங்களுக்குக் கிடைத்தது?
இசைப்பேழையை வாங்கக் கூடிய வசதி உங்களுக்குத் தெரிய இருக்கிறதா?

நட்புடன்
சந்திரவதனா

 

At Sunday, November 04, 2007 1:02:00 AM, Blogger Raghavan alias Saravanan M

@chandravathanaa,

நன்றி உங்கள் வருகைக்கு. தங்கள் வரவு நல்வரவாயிற்று.

எனக்கு மிகப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. உண்மை பகன்றால் இரண்டு வருடங்களுக்கு முன்பு புதிய தமிழ்த்திரைப்படப் பாடல்களைத் தேடும் பொழுது ஒரு வலைத்தளத்தில் சிக்கியது.

ஆல்பத்தின் பெயர் மனதைக் கவரவே ('தென்றலாய் வந்தாய்') அதில் உள்ள 10,11 பாடல்களையும் தரவிறக்கம் செய்தேன். என்னிடம் தற்பொழுது அவை யாவும் இல்லை இந்த ஒன்றைத் தவிர.

உங்களுக்கு வேண்டும் எனில் சொல்லுங்கள் மகிழ்வுடன் அனுப்பி வைக்கிறேன்.

பாடியது தமிழினியா? நினைவில் இல்லை! எனினும் நல்ல குரல்!

நன்றி.
மீண்டும் வருக!

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

 

At Tuesday, June 10, 2008 2:20:00 AM, Anonymous Anonymous

pls sent this song

My mail id gopalakrishnan1983@hotmail.com

Thanks
gopalakrishnan

 

At Saturday, July 12, 2008 1:35:00 PM, Blogger Chandravathanaa

saravanaa please enakkum auppunkal.
my mail id chandra1200atgmail.com
natpudan
chandravathanaa

 

At Thursday, August 21, 2008 8:03:00 AM, Blogger Raghavan alias Saravanan M

@gopalakrishnan,

Thank you. I have sent the song today. Sorry for the delay in response!

Enjoy the song!!

Cheers!

 

At Thursday, August 21, 2008 8:05:00 AM, Blogger Raghavan alias Saravanan M

@chandravathanaa,

தாமதத்திற்கு மன்னிக்கவும். இன்று அனுப்பியுள்ளேன். பாடலைக் கேட்டு மகிழுங்கள். :)

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

 

At Thursday, August 21, 2008 10:58:00 PM, Blogger Chandravathanaa

மிகவும் நன்றி இராகவன்

 

At Friday, August 22, 2008 12:10:00 AM, Blogger Raghavan alias Saravanan M

@chandravathanaa,

சந்தோஷம் சந்திரவதனா அக்கா. கேட்டு மகிழுங்கள்.

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு