Sunday, March 23, 2008

படம்: இயற்கை
பாடல்: வைரமுத்து
பாடியவர்: சுஜாதா
இசை: வித்யாசாகர்

பல்லவி
=======

பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ

(பழைய குரல் கேட்கிறதே)

சரணம் 1
=========

பகலில் நிலவு இரவில் சூரியன்
இரண்டும் பிழையா இரண்டும் சரியா
இயற்கை தீர்ப்பு சொல்லுமா
எந்தக் கண்ணால் உலகம் பார்ப்பேன் நொந்து இளைத்தேன் நூலாக‌
ரெட்டைப் பிள்ளையில் எதன்மேல் நேசம் என்று மயங்கும் தாயாக‌
துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு
எனது வானத்தில் என்னவோ ஏதோ இரண்டு திங்களா இரவு

(பழைய குரல் கேட்கிறதே)


சரணம் 2
=========
கடலில் ஒருவன் கரையில் ஒருவன்
அவனோ உயிரில் இவனோ மனதில்
இரண்டில் எதுதான் வெல்லுமோ
சொல்லி முடிக்கும் துயரம் என்றால் சொல்லி இருப்பேன் நானாக‌
உள்ளுக்குள்ளே மூடி மறைத்தேன் ஊமை கண்ட கனவாக‌
துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு
எனது வானத்தில் என்னவோ என்னவோ இரண்டு திங்களா இரவு

(பழைய குரல் கேட்கிறதே)

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 3/23/2008 05:23:00 AM | Permalink | 0 comments
Sunday, March 09, 2008
படம்: இன்பா
பாடியவர்: கார்த்திக், சின்மயி
இசை: பாலாஜி பி.பி.

பல்லவி
======
ஆ: யாரோ யாரோ எந்த‌ன் நெஞ்சைத் தொட்டுப் போக‌
   மேகத்துக்குள் மூழ்கி விட்டேன் நானே
   யாரோ யாரோ எந்தன் கண்ணுரசிப் போக‌
   அந்தரத்தில் தொங்குகிறேன் நானே
   ஒரு நிமிடத்தில் என் இதயத்தில்
   அட நூறு மைல் வேகத்திலே நுழைந்தாள்
   ஒரு புன்னகை ஒரு கண்ணிமை 
   என் வானத்தையே இரண்டங்குலம் திறந்தாள்
   
   காதலிக்கிறேன் முதல் தடவை 
   காத்திருக்கிறேன் பல தடவை
   மூச்சு வழியாய் உள்புகுந்தாள் 
   இன்று வரையில் திரும்பவில்லை (காதலிக்கிறேன்..)
    (யாரோ யாரோ எந்த‌ன் ...)

சர‌ண‌ம் 1
=======
பெ: வ‌குப்பின் முடிவில் க‌ண்க‌ள் இர‌ண்டை ச‌ந்திக்கின்ற‌ சிறு நேர‌ம்
   அந்த‌ நொடிக்காய் காலை தொட‌ங்கிக் காத்திருக்கும் ம‌ன‌ம் பாவ‌ம்
ஆ: ஜ‌ன்ன‌லருகே ச‌ரியும் கூந்த‌ல் மேஜைக‌ளைத் த‌ழுவாதா
   மேஜை க‌ட‌ந்து அந்த‌ ஸ்ப‌ரிச‌ம் எந்த‌ன் விர‌ல் அறியாதா
   வ‌ந்து விடுவாள் நெஞ்சைத் தொடுவாள்
   என்ற நினைவில் நானும் ந‌ட‌ந்தேன் (யாரோ யாரோ)

பெ: காதலிக்கிறேன் முதல் தடவை 
    காத்திருக்கிறேன் பல தடவை
    மூச்சு வழியாய் உள்புகுந்தான்
    இன்று வரையில் திரும்பவில்லை

ச‌ர‌ண‌ம் 2
======
பெ: நீ என் விரலானாய் வ‌ருடும் நேர‌மே 
    நான் உன் இமையானேன் உற‌ங்கும் கால‌மே
ஆ: தேவ‌தைக‌ள் த‌ரை வ‌ந்து ந‌ட‌க்கும் நேரில் வ‌ந்து உத‌டுக‌ள் கொடுக்கும்
    உன் வ‌ருகை உண‌ர்த்திய‌து என‌க்கு ந‌டுவில் இந்தத் த‌ய‌க்கமும் எத‌ற்கு
பெ: உன் நேச‌த்தில் கைதாகிறேன் உன் பார்வையில் பெண்ணாகிறேன்
    உன் தோள்க‌ளில் குடைசாய்கிறேன் உன் வீட்டில் தான் நான் வாழ்கிறேன்

ஆ: யாரோ யாரோ என் நெஞ்சைத் தொட்டுப்போக‌..

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 3/09/2008 08:12:00 AM | Permalink | 0 comments
Thursday, August 16, 2007
படம்: இந்தியன்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
 
பல்லவி
======
ஆ: கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
      நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
      விடியும் வரையில் போராடினோம் உதிரம் நதியாய் நீராடினோம்
      வைக்கல் எல்லாம் வாளாச்சு துக்கம் எல்லாம் தூளாச்சு கண்ணம்மா
      கண்ணம்மா.... நம்ம வாசல் தேடி சாரல் வரும் 
      மெதுவானம் தூவும் தூறல் வரும்
      வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும் இப்ப (கப்பலேறிப் போயாச்சு)
 
சரணம் - 1
==========
 
பெ: வண்ணமான் வஞ்சிமான் நீர்க்கோலம் கண்களால் கன்னத்தில் போட
      இன்னுமா இன்னுமா போர்க்கோலம் இங்குநீ அங்குநான் போராட
      உனைக் கேட்டா என் நெஞ்சை அள்ளிக் கொடுத்தேன்
      தினம் நான் தான் என் அன்பே முள்ளில் படுத்தேன்
      நானோர் தீவாய் ஆனேன் வாவா அம்மம்மா நாளெல்லாம் 
      கானல் நீரைக் குடித்தேன்
 
ஆ: இப்ப (கப்பலேறிப் போயாச்சு)
 
சரணம் - 2
==========
ஆ: லாலா லாலா லாலலலலா லாலாலாலா லாலா லாலலலலா
      அன்னமே அன்னமே நான் சொல்லி வந்ததா தென்றலும் நேற்று
      உன்னையே உன்னையே நான் எண்ணி வெந்ததைச் சொன்னதா பூங்காற்று
      உந்தன் காலில் மெட்டி போல் கூட நடப்பேன்
      உந்தன் கண்ணுக்கு கண்ணீர் போல் காவல் இருப்பேன்
      மாலை சூடி தோளில் ஆடி கைதொட்டு மெய்தொட்டு 
      உன்னில் என்னைக் கரைப்பேன்
      இப்ப (கப்பலேறிப் போயாச்சு)

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 8/16/2007 10:56:00 AM | Permalink | 1 comments