Monday, April 16, 2007
படம்: மொழி
பாடியவர்: யேசுதாஸ்
இசை: வித்யாசாகர்
பாடல்: வைரமுத்து

பல்லவி
======

பேசா மடந்தையே விழிபேசும் சித்திரமே
சேலைக் குழந்தையே என் செல்லக் கலவரமே
இதயம் என்னும் பூப்பறித்தேன் நரம்புகொண்டு சரம்தொடுத்தேன்
கையில் கொடுத்தேன் கண்ணே நீ காலில் மிதித்தாய் பெண்ணே (பேசா மடந்தையே)

சரணம்-1
========

ஏழுநிறங்களை எண்ணிமுடிக்கும் முன் வானவில் கரைந்தது பாதியிலே
மறுபடி தோன்றுமா பார்வையிலே
பெண்ணின் மனதினைக் கண்டுதெளியுமுன் வாழ்க்கை முடிந்தது குழப்பத்திலே
வானம் நடுங்குது மயக்கத்திலே
காதலைச் சொல்லிக் கரம்குவித்தேன் கற்புக்குப்பழி என்று கலங்குகிறாய்
பூஜைக்கு உனக்குப் பூப்பறித்தேன் பூக்களின் கொலை என்று நடுங்குகிறாய்
வார்த்தைகளால் காதலித்தேன் ஜாடைகளால் சாகடித்தாய்
மழைதான் கேட்டேன் பெண்ணே இடிமின்னல் தந்தாய் கண்ணே (பேசா மடந்தையே)

சரணம்-2
========

மூங்கில்காட்டிலே தீயும் அழகுதான் ஆனால் அதைநான் ரசிக்கவில்லல
அய்யோ இதயம் பொறுக்கவில்லை
கோபம் மூள்கையில் நீயும் அழகுதான் ஆனால் அதைநான் சுகிக்கவில்லை
சகியே என்மனம் சகிக்கவில்லை
உன்சினம் கண்டு என் இதயம் உடம்புக்கு வெளியே துடிக்குதடி
உன்மனம் இரண்டாய் உடைந்ததென்று என்மனம் நான்காய் உடைந்ததடி
விதை உடைந்தால் செடிமுளைக்கும் மனம் உடைந்தால் புல்முளைக்கும்
தண்டனை என்பது எளிது உன் மெளனம் வாளினும் கொடிது (பேசா மடந்தையே)

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/16/2007 08:33:00 PM | Permalink | 0 comments
Thursday, April 12, 2007

படம்          :  அன்பே சிவம்
பாடல்        : வைரமுத்து
பாடியவர்  : கமல்ஹாசன்
இசை         : வித்யாசாகர்
 
பல்லவி
========
ஆ: யார் யார் சிவம் நீ நான் சிவம்
      வாழ்வே தவம் அன்பே சிவம்
      ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
      நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்
குழு: அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் 
        அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)
ஆ: யார் யார் சிவம் நீ நான் சிவம்
 
 
சரணம் -1
==========
ஆ: யார் யார் சிவம் நீ நான் சிவம்
      வாழ்வே தவம் அன்பே சிவம்
      இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்
      அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்
குழு: அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
       அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)
 
 
சரணம் -2
==========
ஆ:  யார் யார் சிவம் நீ நான் சிவம்
      அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா
      மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா
குழு: அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் 
       அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/12/2007 06:55:00 AM | Permalink | 4 comments
Saturday, May 20, 2006
படம் : தம்பி
பாடல்: வைரமுத்து
பாடியவர்: உன்னிகிருஷ்ணன், ஹரிணி
இசை: வித்யாசாகர்

பல்லவி
-----------
பெ: அ அ ஆ அ அ ஆஆஆ
ஆ: அ அ ஆ அ அ ஆ
ஆ: சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா (எல்லாம்)
பெ: காதலித்துப் பார்... காதலித்துப் பார்..

சரணம் - 1
----------------
ஆ: இமையடித்தாலும் இதயம் வலிக்கும்
வலிகளில் கூட வாசனை இருக்கும்
குழு: காதலித்துப் பார்.. காதலித்துப் பார்..
பெ: நரம்புக்கு நடுவே நதிகள் நகரும்
நதியிருந்தாலும் நாவே உலரும்
ஆ: தப்பு எல்லாம் கணிதமாகும்
தவறு எல்லாம் புனிதமாகும்
பெ: பச்சைத் தண்ணீர் வெப்பமாகும்
எச்சில் பண்டம் அமிர்தமாகும்
ஆ: நான்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்

பெ: சுடும் நிலவு சுடாத சூரியன்.

சரணம் - 2
-----------------
பெ: மழைத்துளி நமக்கு சமுத்திரமாகும்
சமுத்திரம் எல்லாம் துளியாய்ப் போகும்
குழு: காதலித்துப் பார்.. காதலித்துப் பார்..
ஆ: சத்தியக் காதல் என்னமும் செய்யும்
சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும்
பெ: தொட்ட பாகம் மோட்சமாகும்
மற்ற பாகம் காய்ச்சலாகும்
ஆ: தெய்வம் தூங்கி மிருகமாகும்
மிருகம் தூங்கி தெய்வமாகும்
பெ: தேடல் ஒன்றே வாழ்க்கை என்று தெரிந்து போகும்

ஆ: சுடும் நிலவு சுடாத சூரியன்

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/20/2006 04:27:00 AM | Permalink | 2 comments