Monday, October 01, 2007

படம்: மலைக்கோட்டை
இசை: மணிசர்மா
பாடியவர்: விஜய் யேசுதாஸ்
பாடல்: யுகபாரதி

பல்லவி
======

தேவதையே வா என் தேவ‌தையே வா
உன் இருவிழி அசைவுக‌ள் எழுதிடும் க‌விதை நான்
பூம‌ழையே வா என் பூம‌ழையே வா
உன் விர‌ல்தொடும் தொலைவினில் விழுகிற‌ அருவி நான்
நீரில்லாம‌ல் மீன்க‌ளும் வேரில்லாமல் பூக்க‌ளும்
பாவ‌ம் தானே பூமியில்
சிலுவைளும் சிற‌கென‌ப் ப‌ற‌ந்திடு

தேவ‌தையே வா என் தேவ‌தையே வா
உன் இருவிழி அசைவுக‌ள் எழுதிடும் க‌விதை நான்

சரணம்-1
=======


விளையும் பூமி த‌ண்ணீரை வில‌கச் சொல்லாது
அலைக‌ட‌ல் சென்று பாயாம‌ல் ந‌திக‌ள் ஓயாது
சிதைவுக‌ள் இல்லை என்றாலே சிலைக‌ள் இங்கேது
வ‌ருவ‌தை எல்லாமல் ஏற்காம‌ல் போனால் வாழ்வேது
பாதை தேடும் கால்க‌ள் தான் ஊரைச் சேரும்
குழலை சேரும் தென்ற‌ல் தான் கீத‌மாகும்
சுற்றும் இந்த‌ பூமியை சுழ‌ல‌ச் செய்யும் காத‌லை
க‌ற்றுக் கொண்டேன் உன்னிட‌ம்
இருவரும் இனி ஒரு உயிர் பிரிவில்லை

ச‌ர‌ண‌ம்-2
=======

அடைம‌ழை ந‌ம்மைத் தொட்டாலே வெயிலே வாவென்போம்
அன‌லாய் வெயில் சுட்டாலே ம‌ழையே தூவென்போம்
த‌னிமைக‌ள் தொல்லை த‌ந்தாலே துணையைக் கேட்கின்றோம்
துணைவரும் நெஞ்சைக் கொள்ளாமல் தனியே தேய்கின்றோம்
ஆசை ம‌ட்டும் இல்லையேல் ஏது நாட்க‌ள்
கைக‌ள் தொட்டு சூட‌வே காத‌ல் பூக்க‌ள்
க‌ண்ணை விற்று ஓவிய‌ம் வாங்கும் இந்த‌ ஊரிலே
அன்பை வைத்து வாழ‌லாம்
சுக‌மென‌ தின‌ம் சுமைக‌ளில் ம‌கிழ்ந்திரு

தேவ‌தையே வா என் தேவ‌தையே வா
உன் இருவிழி அசைவுக‌ள் எழுதிடும் க‌விதை நான்
பூம‌ழையே வா என் பூம‌ழையே வா
உன் விர‌ல்தொடும் தொலைவினில் விழுகிற‌ அருவி நான்
நீரில்லாம‌ல் மீன்க‌ளும் வேரில்லாமல் பூக்க‌ளும்
பாவ‌ம் தானே பூமியில்
சிலுவைளும் சிற‌கென‌ப் ப‌ற‌ந்திடு

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 10/01/2007 03:54:00 AM | Permalink | 4 comments
Monday, April 16, 2007
படம்: மொழி
பாடியவர்: யேசுதாஸ்
இசை: வித்யாசாகர்
பாடல்: வைரமுத்து

பல்லவி
======

பேசா மடந்தையே விழிபேசும் சித்திரமே
சேலைக் குழந்தையே என் செல்லக் கலவரமே
இதயம் என்னும் பூப்பறித்தேன் நரம்புகொண்டு சரம்தொடுத்தேன்
கையில் கொடுத்தேன் கண்ணே நீ காலில் மிதித்தாய் பெண்ணே (பேசா மடந்தையே)

சரணம்-1
========

ஏழுநிறங்களை எண்ணிமுடிக்கும் முன் வானவில் கரைந்தது பாதியிலே
மறுபடி தோன்றுமா பார்வையிலே
பெண்ணின் மனதினைக் கண்டுதெளியுமுன் வாழ்க்கை முடிந்தது குழப்பத்திலே
வானம் நடுங்குது மயக்கத்திலே
காதலைச் சொல்லிக் கரம்குவித்தேன் கற்புக்குப்பழி என்று கலங்குகிறாய்
பூஜைக்கு உனக்குப் பூப்பறித்தேன் பூக்களின் கொலை என்று நடுங்குகிறாய்
வார்த்தைகளால் காதலித்தேன் ஜாடைகளால் சாகடித்தாய்
மழைதான் கேட்டேன் பெண்ணே இடிமின்னல் தந்தாய் கண்ணே (பேசா மடந்தையே)

சரணம்-2
========

மூங்கில்காட்டிலே தீயும் அழகுதான் ஆனால் அதைநான் ரசிக்கவில்லல
அய்யோ இதயம் பொறுக்கவில்லை
கோபம் மூள்கையில் நீயும் அழகுதான் ஆனால் அதைநான் சுகிக்கவில்லை
சகியே என்மனம் சகிக்கவில்லை
உன்சினம் கண்டு என் இதயம் உடம்புக்கு வெளியே துடிக்குதடி
உன்மனம் இரண்டாய் உடைந்ததென்று என்மனம் நான்காய் உடைந்ததடி
விதை உடைந்தால் செடிமுளைக்கும் மனம் உடைந்தால் புல்முளைக்கும்
தண்டனை என்பது எளிது உன் மெளனம் வாளினும் கொடிது (பேசா மடந்தையே)

Labels: , , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/16/2007 08:33:00 PM | Permalink | 0 comments