Monday, October 01, 2007

படம்: மலைக்கோட்டை
இசை: மணிசர்மா
பாடியவர்: விஜய் யேசுதாஸ்
பாடல்: யுகபாரதி

பல்லவி
======

தேவதையே வா என் தேவ‌தையே வா
உன் இருவிழி அசைவுக‌ள் எழுதிடும் க‌விதை நான்
பூம‌ழையே வா என் பூம‌ழையே வா
உன் விர‌ல்தொடும் தொலைவினில் விழுகிற‌ அருவி நான்
நீரில்லாம‌ல் மீன்க‌ளும் வேரில்லாமல் பூக்க‌ளும்
பாவ‌ம் தானே பூமியில்
சிலுவைளும் சிற‌கென‌ப் ப‌ற‌ந்திடு

தேவ‌தையே வா என் தேவ‌தையே வா
உன் இருவிழி அசைவுக‌ள் எழுதிடும் க‌விதை நான்

சரணம்-1
=======


விளையும் பூமி த‌ண்ணீரை வில‌கச் சொல்லாது
அலைக‌ட‌ல் சென்று பாயாம‌ல் ந‌திக‌ள் ஓயாது
சிதைவுக‌ள் இல்லை என்றாலே சிலைக‌ள் இங்கேது
வ‌ருவ‌தை எல்லாமல் ஏற்காம‌ல் போனால் வாழ்வேது
பாதை தேடும் கால்க‌ள் தான் ஊரைச் சேரும்
குழலை சேரும் தென்ற‌ல் தான் கீத‌மாகும்
சுற்றும் இந்த‌ பூமியை சுழ‌ல‌ச் செய்யும் காத‌லை
க‌ற்றுக் கொண்டேன் உன்னிட‌ம்
இருவரும் இனி ஒரு உயிர் பிரிவில்லை

ச‌ர‌ண‌ம்-2
=======

அடைம‌ழை ந‌ம்மைத் தொட்டாலே வெயிலே வாவென்போம்
அன‌லாய் வெயில் சுட்டாலே ம‌ழையே தூவென்போம்
த‌னிமைக‌ள் தொல்லை த‌ந்தாலே துணையைக் கேட்கின்றோம்
துணைவரும் நெஞ்சைக் கொள்ளாமல் தனியே தேய்கின்றோம்
ஆசை ம‌ட்டும் இல்லையேல் ஏது நாட்க‌ள்
கைக‌ள் தொட்டு சூட‌வே காத‌ல் பூக்க‌ள்
க‌ண்ணை விற்று ஓவிய‌ம் வாங்கும் இந்த‌ ஊரிலே
அன்பை வைத்து வாழ‌லாம்
சுக‌மென‌ தின‌ம் சுமைக‌ளில் ம‌கிழ்ந்திரு

தேவ‌தையே வா என் தேவ‌தையே வா
உன் இருவிழி அசைவுக‌ள் எழுதிடும் க‌விதை நான்
பூம‌ழையே வா என் பூம‌ழையே வா
உன் விர‌ல்தொடும் தொலைவினில் விழுகிற‌ அருவி நான்
நீரில்லாம‌ல் மீன்க‌ளும் வேரில்லாமல் பூக்க‌ளும்
பாவ‌ம் தானே பூமியில்
சிலுவைளும் சிற‌கென‌ப் ப‌ற‌ந்திடு

Labels: , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 10/01/2007 03:54:00 AM | Permalink | 4 comments
Tuesday, May 16, 2006
படம் : ராம்
பாடியவர் : விஜய் யேசுதாஸ் , யுவன் ஷங்கர் ராஜா
இசை : யுவன் ஷங்கர் ராஜா

பல்லவி
---------
நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவறை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒருமுறை சுமப்பாயம்மா...
லாஹில்லா லாஹி லல்லல்லாலல்லா லாஹில்லா லாஹி லல்லல்லால்லா (லாஹில்லா..)
(நிழலினை நிஜமும் பிரிந்திடுமா)

சரணம் - 1
-------------
நடமாடும் சவமாய் நானிங்கே இருக்க
விதிசெய்த சதியா தெரியலம்மா
கடல்துப்பும் அலையும் கடலில்தான் சேரும்
அதுபோல என்னையும் சேர்த்துக்கம்மா
உன்பிள்ளை என்று ஊர்சொல்லும் போது
எனக்கே நான் யாரோ என்றாகிப் போனேன்
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா
மொத்த பூமி எனக்கேதான் சொந்தமம்மா
பத்துமாசம் உள்ளிருந்தேன் பக்குவமா
பூமிக்குநான் வந்ததென்ன குத்தமம்மா ...
லாஹில்லா லாஹி லல்லல்லாலல்லா லாஹில்லா லாஹி லல்லல்லால்லா

சரணம் - 2
-------------
லாஹில்லா லாஹி லலல்லலா லாஹில்லா லாஹி ஏ ஏ லாஹி
திசையெல்லாம் எனக்கு இருளாகிக் கிடக்கு
எங்கேயோ பயணம் தொடருதம்மா
என்னோட மனசும் பழுதாகிப்போச்சு
சரிசெய்ய வழியும் தெரியலம்மா
சூரியன் உடைஞ்சா பகலில்ல அம்மா
ஆகாயம் மறைஞ்சா அகிலமே சும்மா
என்னைச் சுத்தி என்னென்னமோ நடக்குதம்மா
கண்டதெல்லாம் கனவாகிப் போயிடுமா
தூக்கத்திலே உன்னநானும் தொலைச்சேனம்மா...
தேடித்தர தெய்வம் வந்து உதவிடுமா ஆ ஆ ஆ
லாஹில்லா லாஹி லல்லல்லாலல்லா லாஹில்லா லாஹி லல்லல்லால்லா

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/16/2006 11:49:00 AM | Permalink | 3 comments