Monday, April 28, 2008

படம்: தாம் தூம்
பாடியவர்கள்: கிருஷ், பாம்பே ஜெயஸ்ரீ
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பல்லவி
======

ஆ: வலியே என் உயிர்வலியே நீ உலவுகிறாய் என் விழிவழியே
சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழுமதியே பெண் பகலிரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே

பெ: யாரோ மனதிலே ஏனோ கனவிலே
நீயா உயிரிலே தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னைப் பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமையாகின்றதோ

ஆ: வலியே என் உயிர்வலியே நீ உலவுகிறாய் என் விழிவழியே
குழு: ஆஹா
ஆ: சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே
குழு: ஏஹே ஏஹே ஏ
ஆ: மதியே என் முழுமதியே பெண் பகலிரவாய் நீ படுத்துறியே
குழு: ஏஹே
ஆ: நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே
குழு: ஏஹேஹேஹே ஏஹியேஹியே

சரணம் 1
=======

பெ: மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயா ஆ: முழுமையாய்
பெ: நானா ஆ: வெறுமையாய்
பெ: நாமா இனி சேர்வோமா

(யாரோ மனதிலே ஏனோ கனவிலே.. )

சரணம் 2
=======

பெ: மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள் தான்
மிருதுவாய்ப் பேசியே என்னுள் வசித்தது உன் வார்த்தை தான்
கண்களைக் காணவே இமைகளே மறுப்பதா
வெந்நீர் குழு: வெண்ணிலா
பெ: கண்ணீர் குழு: கண்ணிலா
பெ: நானும் வெறும் கானலா யாரோ
குழு: யாரோ பெ: மனதிலே ஏனோ
குழு: ஏனோ பெ: கனவிலே ஓ நீயா
குழு: ஓ நீயா பெ: உயிரிலே தீயா
குழு: தீயா பெ: தெரியலே
பெ: காற்று வந்து மூங்கில் என்னைப் பாடச் சொல்கின்றதோ

ஆ: வலியே என் உயிர்வலியே நீ உலவுகிறாய் என் விழிவழியே
குழு: ஆஹா
ஆ: சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே
குழு: ஏஹே ஏஹே ஏ
ஆ: மதியே என் முழுமதியே பெண் பகலிரவாய் நீ படுத்துறியே
குழு: ஆஹா
ஆ: நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே
குழு: ஏஹே ஏஹே ஏ

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/28/2008 05:55:00 AM | Permalink | 1 comments
Thursday, November 08, 2007

படம்: பொல்லாதவன்
இசை: ஜி.வி. பிரகாஷ் ('வெயில்' பட இசையமைப்பாளர்)
பாடியவர்கள்: கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ


பல்லவி
=======
ஆ: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடி
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடித்ததடி

பெ: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடா

இரு: எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடிக்குதடி

சரணம்-1
========
ஆ: முதன்முறை என் விரல் பூக்கள் பறித்தது தோட்டத்திலே
தலையணை உறையும் ஸ்வீட் ட்ரீம்ஸ் பறித்தது தூக்கத்திலே
காலைத் தேநீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளே
கிறுக்கன் என்றொரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே

பெ: காதலே ஒருவகை ஞாபக மறதி கண்முன்னே நடப்பது மறந்திடுமே
வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித் தலைகீழாகத் தொங்கிடுமே
ஓ உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடா

ஆ: எடை குறையுதே தூக்கம் தொலையுதே அய்யோ பைத்தியமே பிடிக்கிறதே

சரணம்-2
========
பெ: என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே
காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிறக்கத்திலே
ஓ குட்டிப் பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே
ஊ ஆ ஆ ஊ ஆ ஊ ஆ ஊ ஊ ஆ ரா ரே ரா ரே

ஆ: ஓஓஓ காதலும் ஒருவகை போதைதானே உள்ளுக்குள் வெறியேற்றும் பேய்போல
ஏனிந்தத்தொல்லை என்று தள்ளிப்போனால் புன்னகை செய்துகொஞ்சும் தாய்போல

பெ: உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே அய்யோ அது எனக்குப் பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே அய்யோ பைத்தியமே பிடித்ததடா

ஆ: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என்முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்

இரு: உடல் கொதிக்குதே உயிர் மிதக்குதே அய்யோ இது எனக்குப் பிடிக்குதடா
எடை குறையுதே தூக்கம் தொலையுதே அய்யோ பைத்தியமே பிடிக்குதடா

ஆ: ஆ ஆ ஆ ஆ .. ஆ ஆ ஆ ஆ..

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 11/08/2007 04:39:00 AM | Permalink | 0 comments