Tuesday, September 09, 2008
படம்: ராமன் தேடிய சீதை
பாடியவர்கள்: மதுபாலகிருஷ்ணன், ஹரிணி
இசை: வித்யாசாகர்

பல்லவி
=======

பெ: ம்ஹீம் ஹீம் ஹீம் ஹீம் ஹீம்
ஆ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
பெ: ஹீம் ஹீம் ஹீம்
ஆ: இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
பெ: ஹீம் ஹீம் ஹீம்
ஆ: கண்ணை மூடி உன்னைக் கண்டால் அப்பவே அப்பவே
கைவளையல் ஓசை கேட்டால் அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே
பெ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
ஆ: இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

சரணம் 1
=======

ஆ: வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம்
உள்ளச் சேதம் வந்து விட்டால் என்ன செய்வது
பெ: முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் ரத்தம் மட்டும் தான்
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன் நித்தம் யுத்தம் தான்
ஆ: சொல்லித் தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட‌
பெ: மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட‌
ஆ: உன்னைக் கண்டேன் என்னைக் காணோம்
என்னைக் காண உன்னை நானும்
பெ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

சரணம் 2
=======

ஆ: எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம்
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம்
பெ: நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்
ஆ: உன்னைக் காண நானும் வந்தால் சாலை எல்லாம் பூஞ்சோலை
பெ: உன்னை நீங்கிப் போகும் நேரம் சோலை கூடத் தார்ப்பாலை
ஆ: மண்ணுக்குள்ளே வேரைப் போலே நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்

பெ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
ஆ: இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
பெ: கண்ணுக்குள்ள‌ உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
ஆ: கைவளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே
பெ: ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 9/09/2008 12:50:00 AM | Permalink | 0 comments
Wednesday, April 04, 2007

படம்: பொறி
பாடியவர்கள் : மதுபாலகிருஷ்ணன், மதுஸ்ரீ
இசை: தினா


பல்லவி
======

ஆ: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
ஆ: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்
பெ: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே
ஆ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

சரணம் 1
========

ஆ: பயணத்தில் வருகிற சிறுதூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல்கூச்சம்
பெ: பரீட்சைக்குப் படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல்மாலை
ஆ: புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே
பெ: தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானே
ஆ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்


சரணம் 2
========

ஆ: தாய்மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
பெ: தேய்பிறை போல்படும் நகக்கணுக்கள்
வகுப்பறை மேஜையில் நிஜம்கிறுக்கல்
ஆ: செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவன் தருகிற பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீதானே
பெ: எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே
ஆ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 4/04/2007 02:42:00 AM | Permalink | 4 comments