படம்: சந்திரலேகா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி, <பெண் பாடகி பெயர் தெரிந்தால் சொல்லுங்களேன்>
எழுதியவர்: <தங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்>
பல்லவி
========
ஆ: அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப்பாவையே
வானாடும் மீனே நீதானே வேண்டும்
ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்
பெ: அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே
அரும்பும் தளிரே
சரணம்-1
========
ஆ: இனிமையான பொன்மாலை வேளை வளையோசை தூது வந்ததே
இளையராணி வரும் நேரம் என்று இனிப்பான சேதி சொன்னதே
பெ: பூமாலை நீ சூடவே பாவையாய் மண்ணில் தோன்றினேன்
ஆ: என் ஜீவன் நீயாகவே எனதெல்லை நானும் தாண்டினேன்
பெ: வானம் பூமி வாழும் காலம் நானும் நீயும் வாழலாம்
ஆ: அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப்பாவையே
வானாடும் மீனே நீதானே வேண்டும்
ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்
சரணம்-2
=========
பெ: தலைவனாக நீ வேண்டும் என்று திருக்கோவில் தீபம் ஏற்றினேன்
விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லிக் குழல் மீது பூவைச் சூடினேன்
ஆ: தேனாற்றில் நீராடவே தேடினேன் தேடி வாடினேன்
பெ: நான் சூடும் நூலாடையாய் உனைத்தானே நாளும் சூடினேன்
ஆ: ராஜராஜன் கூடும் போது ராஜயோகம் வாய்த்தது
பெ: அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப்பாவையே
வானாடும் மீனே நீதானே வேண்டும்
ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்
ஆ: அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே
அரும்பும் தளிரே
நன்றி: இப்பாடலை எனக்கு அறிமுகம் செய்த நண்பர் யோகேஷ் பிரபுவுக்கும், இதனைத் தரவிறக்கம் செய்யும் சுட்டியை இப்பாடல் இருக்கும் எனத் தெரியாமலே அனுப்பிய நண்பன் தனஞ்செயனுக்கும்.
Labels: Movie-C, Song-A, இசை இளையராஜா, பாடகர் அருண்மொழி
« back home