படம்: தமிழ் எம்.ஏ
பாடியவர்: இளையராஜா
பாடல்: நா. முத்துக்குமார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பல்லவி
======
பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே (பறவையே)
அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீதானே
அடி என் பாதை இருக்கும் இடம் எது நீதானே
பார்க்கும் திசைகளெல்லாம் பாவை முகம் வருதே
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் கைகள் சொல்வதுண்டோ
நீ போட்டாய் கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக
(பறவையே எங்கு இருக்கிறாய்)
சரணம்-1
=======
உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடு வானம் போலவே
கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மெளனங்கள் போதும்
இந்தப் புல் பூண்டும் பறவையின் நாமம் போதாதா
இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா
முதல்முறை வாழப் பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே அன்பே
சரணம்-2
=======
ஏழை காதல் மலைகள் தனில்
தோன்றுகின்ற ஒரு நதியாகும்
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும் நதியாகிடுதோ
இதோ இதோ இந்தப் பயணத்திலே
இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்
இந்த நிகழ்காலம் இப்படியேதான் தொடராதா
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா
முதல்முறை வாழப் பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே அன்பே
Labels: Movie-T, Song-P, இசை யுவன்ஷங்கர்ராஜா, பாடகர் இளையராஜா
thanks for the post ragavan , my fav padal, neengal vaalga