படம்: வால்மீகி
பாடியவர்கள்: இளையராஜா, பேலா ஷிண்டே
பாடல் : <<தெரியவில்லை>>
இசை : இளையராஜா
சரணம்
--------------
குழு: மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
பெ: ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
(ஒளி தரும் சூரியனும்..)
விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானேன்
அது போதும் அது போதும் என் விடியலுக்கோர் கிழக்கானாய்
ஆ: ஒளி தரும் சூரியனும் நீ இல்லை

ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
பல்லவி 1
----------------
ஆ: என்னை மாற்ற ஏன் எண்ணினாய் இங்கு என்னை ஏமாற்றி வாழ்ந்தவன்
கல்லைக் கூட நீ கனிய வைக்கிறாய் புல்லைப் பூவென மாற்றினாய்
பெ: மாறிப் போகின்ற உலகிலே என்றும் அன்பு மாறாது சொல்லலாம்
ஒன்றும் இல்லாது ஓய்ந்து நின்றாலும் ஊக்கத்தை அன்பில் ஊட்டலாம்
ஆ: எத்தனை உள்ளம் நோக என்னென்ன செய்தவன்
சத்தியம் செய்தே சொல்வேன் இன்று தான் மனிதனே
பெ: திருந்திய பின்னே வருந்துவது ஏனோ
திருந்திய பின்னே வருந்துவது ஏனோ வருவது வசந்தங்களே....
பல்லவி 2
-----------------
பெ: வண்ணப் பூப்பூத்து வாசம் எங்கெங்கும் வந்து சொல்கின்ற நாளிது
கோயில் மணியோசை தென்றல் காற்றோடு காதில் தேன் பாயும் நாளிது
ஆ: கொஞ்சும் கிளி போல கோலக்குயில் போல பிஞ்சு மனசாகிப் போகுது
கங்கை நதி போல பொங்கும் அலை போல உள்ளம் ஒன்றாகிச் சேர்ந்தது
பெ: இன்று போல் என்றும் என்றும் நல்லதே செய்யலாம்
உள்ளதே போதும் என்று நிம்மதி கொள்ளலாம்
ஆ: ஒரு வழி அடைத்தால் மறுவழி திறக்கும்
ஒரு வழி அடைத்தால் மறுவழி திறக்கும் அதிசயம் அதிசயமே
பெ: ஒளி தரும் சூரியனும் நான் இல்லை
ஆ: ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
பெ: இரவனில் வான் வரும் நிலவும் இல்லை
ஆ: இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
பெ: ஒளி தரும் சூரியனும் நான் இல்லை
ஆ: ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
பெ: இரவனில் வான் வரும் நிலவும் இல்லை
ஆ: இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
பெ: விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானேன்
அது போதும் அது போதும் உன் விடியலுக்கோர் கிழக்கானேன்
ஆ: ஒளி தரும் சூரியனும் நீ இல்லை பெ: நான் இல்லை
ஆ: இரவினில் வான் வரும் நிலவும் இல்லை பெ: நிலவும் இல்லை
ஆ: விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானாய்
பெ: விளக்கானேன்
ஆ: அது போது அது போதும் என் விடியலுக்கோர் கிழக்கானாய்
பெ: கிழக்கானேன்
ஆ: ஒளிதரும் சூரியனும் நீ இல்லை
-- மு. இராகவன் என்ற சரவணன்
15 நவம்பர் 2013 வெள்ளி இரவு 11 25 மணி (இந்திய நேரப்படி)
நவி மும்பை | மகாராஷ்டிரா | இந்தியா

Labels: Movie-V, Song-O, இசை இளையராஜா, பாடகர் இளையராஜா, பாடகி பேலா ஷிண்டே