Saturday, December 29, 2007
 
படம்: கிச்சா வயசு 16
பாடல்: பா.விஜய்
இசை: தினா
பாடியவர்: உன்னிமேனன் 
 
பல்லவி
======
 
சில நேரம் சில பொழுது
சோதனை வரும் பொழுது
நம்பிக்கையால் மனம் உழுது
வானில் உன் பெயர் எழுது 

(சில நேரம் சில பொழுது)

லட்சியக் கதவுகளைத் திறந்து வைப்போம்
இதயத்தின் சோகங்களை இறக்கி வைப்போம்
சூரியன் என்பது கூட சிறு புள்ளி தான்
சாதிக்க முதல் தகுதி ஒரு தோல்வி தான்
 
(சில நேரம் சில பொழுது)
 
சரணம்-1
=======
வானம் தலையில் மோதாது
பூமி நகர்ந்து போகாது
நடுவில் இருக்கும் உந்தன் வாழ்க்கை
தொலைந்து ஒன்றும் போகாது 
 
சோகம் என்றும் முடியாது
கவலை என்றும் அழியாது
இரண்டையும் தான் ஏற்றுக் கொண்டால்
வாழ்க்கை என்றும் தோற்காது
 
நெஞ்சே பொன் நெஞ்சே தடையாவும் துரும்பு
தீயாய் நீயானால் மெழுகாகும் இரும்பு
தோல்வி அவை எல்லாம் சில காயத் தழும்பு
ஏறு முன்னேறு ஒளியோடு திரும்பு
 
பறவை அதற்கும் இறகு சுமையா
தோல்வி ஒரு தடையா
 
(சில நேரம் சில பொழுது)
 

சரணம்-2
=======

உனது கண்கள் அழும்போது
எந்த விரலும் துடைக்காது
பிறரை நம்பி நீயும் நின்றால்
வந்த பாரம் தீராது
 
இன்று வந்த ராஜாக்கள்
நேற்று என்ன செய்தார்கள்
தோல்வி வந்து தீண்டும் போது
தன்னை நம்பி வாழ்ந்தார்கள்
 
கோடு அதன் மேலும் புதுக்கோலம் பிறக்கும்
மேடு அதில் ஏறும் நீர் வேகம் எடுக்கும்
சோகம் அதை வென்றால் ஒரு சக்தி பிறக்கும்
பாதை சில போனால் பல பாதை பிறக்கும்
 
நேற்றை மறப்போம் நாளை ஜொலிப்போம்
இன்று ஜெயித்திருப்போம்

(சில நேரம் சில பொழுது)

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 12/29/2007 12:53:00 AM | Permalink | 0 comments