Monday, May 14, 2007
படம்                 : சென்னை 600028
பாடியவர்கள்  : எஸ்.பி.பி. சரண், வெங்கட்பிரபு
இசை                : யுவன்ஷங்கர்ராஜா
இயக்கம்          : வெங்கட்பிரபு
 
 
பல்லவி
=======
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யாரென்று கண்டு யார் சொல்வாரோ
கடல்கொண்ட மழைநீரை இனம்காண முடியாது
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யாரென்று கண்டு யார் சொல்வாரோ
கடல்கொண்ட நதிநீரை அடையாளம் தெரியாது
உண்ணும் சோறு நூறாகும்
ஒன்றுக்கொன்று வேறாகும்
உப்பில்லாமல் என்னாகும்
உப்பைப் போல நட்பை எண்ணுவோம் (யாரோ யாருக்குள்)
 
 
சரணம்-1
=========
WarShip என்றும் நீரில் ஓடும்
SpaceShip என்றும் வானில் ஓடும்
FriendShip ஒன்று தான் என்றும் நெஞ்சில் ஓடுமே
ஓஹோஹோஹோ
FriendShip என்றும் தெய்வம் என்று
Worship செய்வோம் ஒன்றாய் நின்று
ஒவ்வோர் உள்ளமும் இங்கு கோயிலாகுமே
ஒருவர் மீது ஒருவர் இங்கு காதல்கொண்டு வாழ்கின்றோம்
காதல் என்றால் கொச்சையாக அர்த்தம் செய்யக் கூடாது
நண்பா வா.. ஹே   (யாரோ யாருக்குள்)
 
சரணம்-2
=========
எங்கும் திரியும் இளமைத்தீவே
என்றும் எரியும் இனிமைத்தீயே
தண்ணீர் அவிக்குமா வீசும் காற்று அணைக்குமா
என்னைக் கண்டா தன்னந்தனியா
எட்டிப் போகும் சிக்கன்குனியா
எங்கும் செல்லுவோம் நாங்கள் என்றும் வெல்லுவோம்
நாட்டிலுள்ள கூட்டணி போல்
நாங்கள் மாற மாட்டோமே
நட்பு என்னும் சத்தியத்தை நாங்கள் மீற மாட்டோமே
நண்பா வா ஹே..   (யாரோ யாருக்குள்)
 

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/14/2007 03:39:00 AM | Permalink | 2 comments
Tuesday, May 08, 2007
படம்               : சொல்லாமலே
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை              : பாபி
இயக்கம்         : சசி
 
பல்லவி
======
சிந்தாமணியே வா சிறகை விரித்தேன் வா
மூன்றாம் பிறையே வா முழுதாய் மனதைத் தா
முதன்முதலாய் என்மனதில் பெண்முகம் பார்க்கிறேன்
எனதுயிரில் அவள் நுழையும் ஓசையைக் கேட்கிறேன்
சிறைக்கதவை உடைத்து விட்டுப் பறந்திடப் போகிறேன்
பறந்திடப் பறந்திடப் பறந்திடத் தடையில்லையே (சிந்தாமணியே வா)
 
 
சரணம்-1
=======
விழிகள் உனைப்பார்த்து சுகமாய்க் கலங்குதடி
உயிரே கரமாகி உன்னை வணங்குதடி
பெண்மையதன் மென்மையினை உன் ஸ்பரிசம் சொல்லியதே
என்னருகில் நீயிருந்தால் சூரியனும் குளிர்கிறதே
தேய்பிறையின் வாசலிலே பௌர்ணமிகள் துள்ளியதே
பறந்திடப் பறந்திடப் பறந்திடத் தடையில்லையே (சிந்தாமணியே வா)
 
 
சரணம்-2
=======
பூவைத் தேடி வந்தேன் புதையல் கிடைத்ததடி
பாதை தேடி வந்தேன் பாதம் கிடைத்ததடி
வெய்யிலிலே நீ நடந்தால் சூரியனை ஒளித்துவைப்பேன்
குடையெடுக்க நீ மறந்தால் மழையினையே நிறுத்திவைப்பேன்
எனதுயிரை மறந்துவிட்டேன் உனதுயிரில் கலந்துவிட்டேன்
பறந்திடப் பறந்திடப் பறந்திடத் தடையில்லையே (சிந்தாமணியே வா)
 

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/08/2007 04:31:00 AM | Permalink | 0 comments
Monday, May 07, 2007

படம்:          தாமிரபரணி

பாடியவர்:  கே.கே (கே.கிருஷ்ணமூர்த்தி)

இசை:         ஹாரிஸ் ஜெயராஜ்

இயக்குநர்: ஹரி

 

 

பல்லவி

========

 

வார்த்தை ஒண்ணு வார்த்தை ஒண்ணு கொல்லப் பாக்குதே

அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டப் பாக்குதே (வார்த்தை ஒண்ணு)

நான் திமிரா செஞ்ச காரியம் ஒண்ணு தப்பாப் போனதே

என் தாமிரபரணித் தண்ணி இப்போ உப்பாப் போனதே

நீ எனக்கு சொந்தமில்லை என்று சொன்னவுடன் மனசு வெறுத்துப்போச்சே

என் நிழலில் கூட இப்ப ரத்தம் கொட்டுதடி இதயம் சுருங்கிப்போச்சே (வார்த்தை ஒண்ணு)

 

சரணம்-1

=========

 

உறவுகள் எனக்கது புரியல சில உணர்வுகள் எனக்கது விளங்கல

கலங்கரை விளக்கமே இருட்டுல

பெத்ததுக்கு தண்டனைய கொடுத்துட்டேன்

அவன் ரத்தத்துல துக்கத்தை நான் தெளிச்சுட்டேன்

அன்புல அரளிய வெதைச்சிட்டேன்

அட்டைக்கத்தி தான்னு நான் ஆடிப்பாத்தேன் விளையாட்டு

வெட்டுக்கத்தியாக அது மாறி இப்ப வினையாச்சு

பட்டாம்பூச்சி மேல ஒரு கொட்டாங்குச்சி மூடியதே

கண்ணாமூச்சி ஆட்டத்துல கண்ணே இப்ப காணலியே

வார்த்தை ஒண்ணு.. வார்த்தை ஒண்ணு...

 

சரணம்-2

=========

 

படைச்சவன் போட்ட முடிச்சிது என் கழுத்துல மாட்டி இறுக்குது

பகையிலே மனசு தான் பதறுது

கனவுல பெய்யிற மழையிது நான் கைதொடும் போது மறையுது

மேகமே சோகமா உறையுது

சூரத்தேங்கா(ய்) போல என்னை சுக்குநூறா உடைக்காதே

சொக்கப் பனைமேல நீ தீயை அள்ளி வீசாதே

எட்டி எட்டிப் போகையில ஈரக்குலை வேகிறதே

கூட்டாஞ்சோறு ஆக்கையில திரிக்காத்து வீசுதே

(வார்த்தை ஒண்ணு)
 
 

Labels: , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/07/2007 02:21:00 AM | Permalink | 0 comments
Thursday, May 03, 2007
படம்: தீபாவளி
பாடியவர்கள்:
மதுஸ்ரீ, அனுராதாஸ்ரீராம்
இசை: யுவன்ஷங்கர்ராஜா
இயக்குநர்: எழில்


பல்லவி
======
மதுஸ்ரீ:
கண்ணன் வரும்வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம் அதை ஏற்கநின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள் றெக்கை விரிக்கும் ரெண்டுவிழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே (கண்ணன் வரும்வேளை)


சரணம்-1
=======
அனுராதா ஸ்ரீராம்:
வான்கோழி கொள்ளும் ஆசை யாழில் தோற்பது
தைமாசம் கொள்ளும் ஆசை கூடிப் பார்ப்பது
தேர்க்கால்கள் கொள்ளும் ஆசை வீதி சேர்வது
ஓரீசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது
கூறவா இங்கு எனது ஆசையை தோழனே வந்து உளறு மீதியை
கோடிக் கோடி ஆசை தீரும் மாலை
மதுஸ்ரீ: கண்ணன் வரும்வேளை..



சரணம்-2
========
அனுராதா ஸ்ரீராம்:
பூவாசம் தென்றலோடு சேரவேண்டுமே
ஆண்வாசம் தொட்டிடாத தேகம் ஊனமே
தாய்ப்பாசம் பத்துமாதம் பாரம் தாங்குமே வாழ்நாளின் மிச்சபாரம் காதல் எழுதுமே
நீண்டநாள் கண்ட கனவு தீரவே தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே
நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே (கண்ணன் வரும்வேளை)

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/03/2007 12:22:00 AM | Permalink | 4 comments
Wednesday, May 02, 2007
படம்: கடலோரக் கவிதைகள்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி
இசை: இளையராஜா
இயக்குநர்: பாரதிராஜா
 
 
பல்லவி
======
ஆ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
      எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
      பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவளமல்லித் தோட்டம்
      நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள் கூச்சம்
பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
      கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
 
 
சரணம்-1
=========
பெ: மனசு தடுமாறும் அது நெனச்சா நெறம்மாறும்
      மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடைபோடும்
ஆ: நித்தம் நித்தம் ஒன்நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
     மாடுரெண்டு பாதைரெண்டு வண்டிஎங்கே சேரும்
பெ: பொத்திவச்சா அன்பு இல்லை சொல்லிப்புட்டா வம்புஇல்லை
      சொல்லத்தானே தெம்புஇல்லை இந்தத்துன்பம் யாரால 
 
 
சரணம்-2
=========
ஆ: பறக்கும் திசைஏது இந்தப் பறவை அறியாது
      ஒறவும் தெரியாது அது ஒனக்கும் புரியாது
பெ: பாறையில பூமொளச்சுப் பாத்தவுக யாரு
      அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
ஆ: காலம் வரும் வேளையில காத்திருப்பேன் பொன்மயிலே
பெ: தேருவரும் உண்மையிலே சேதிசொல்வேன் கண்ணாலே
 
 
பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே..
       கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
       பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவளமல்லித் தோட்டம்
       நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்
ஆ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
       எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

Labels: , , , , ,

 
posted by Raghavan alias Saravanan M at 5/02/2007 03:07:00 AM | Permalink | 0 comments